Mother Song Lyrics In Tamil
Mother Song Lyrics song is from the movie Valimai which was released in the year 2022 and it was sung by the singers Sid Sriram. The lyrics of this song Mother Song Lyrics was written by Vignesh Shivan and music composed by Yuvan Shankar Raja. Ajith Kumar have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar
திரைப்படம் : Valimai
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Sid Sriram
எழுத்தாளர் : Vignesh Shivan
வருடம் : 2022
=================
நடிகர்கள் :
அஜித்குமார்
இசையமைப்பாளர் :
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் :
சித் ஸ்ரீராம்
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்
ஆவலோடு தான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்
ஆசையோடு தான்
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே
உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை
வரைந்து வைத்தாயே
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே
விடுமுறையே இல்லாமல்
தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய்
நான் என்ன தான் தருவதோ
அம்மா ஓ அம்மா
அம்மா ஆ
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல் வரி நீ அம்மா
என் உயிர் என்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே தந்தாயே
என் உலகம் நீ என் தாயே
Mother Video Song
Mother Song Lyrics from Valimai | Mother பாடல் வரிகள் in tamil