இந்த ஆன்மீக பதிவில் (மஹா மிருத்யுஞ்சய மந்திரம்) – Maha Mrityunjaya Mantra in Tamil | Most Powerful Shiva Mahamrityunjaya Mantra பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மஹா மிருத்யுஞ்சய மந்திரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
============
மஹா மிருத்யுஞ்சய மந்திரம்
============
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||
============
மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பொருள் (Maha Mrityunjaya Mantra Meaning in Tamil)
============
மிருத்யுஞ்ஜய மந்திர பொருள்
நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.
பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.
============
மிருத்யுஞ்ஜய மந்திர சிறப்பு
============
மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பலன்சிறப்பு | Significance of Mrityunjaya Mantra
சக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை (Mrityunjaya Mantra in Tamil). இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (Maha Mrityunjaya Mantra) பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது… நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது
============
புராணங்களில் மிருத்யுஞ்ஜய மந்திரம்
பண்டைய சமஸ்கிருதத்தில் உள்ள இந்த மந்திரம், அறிவொளிக்கான அழைப்பு மற்றும் ஆன்மாவின் கர்மாவை மிகவும் ஆழமான மட்டத்தில் சுத்தி செய்ய வழி வகுக்கிறது. உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. “ருத்ர மந்திரம்” என்றும் அழைக்கப்படும் மிருத்யுஞ்சய மந்திரம் “ரிக் வேதம் VII.59.12”, “யஜுர் வேதம் III.60″, அதர்வ வேதம் XIV.1.17”, “சிவ புராணம்” ஆகியவற்றில் காணப்படுகிறது. புராணத்தின் படி சுக்ராச்சாரியார் முனிவருக்கு சிவபெருமான் மூலம் இந்த மந்திரம் வழங்கப்பட்டது.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி-வர்தனம் ǀ
உர்வாருகம்-இவ பந்தநாத்மருத்யோர்முக்ஷியா மாம்ருதாத்
==பூர்புவஸ்ஸுவரோம் ஜூம் சஹா ஹௌம் ஓம் ǁitiǁ==
============
மஹாமிருத்யுஞ்சய மந்திர வகைகள்
மிருத்யுஞ்சய் மந்திரம், ஏகாக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், த்ரயக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், சதுராக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், நவக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம்.
(maha mrityunjaya mantra tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், Mantras, Veda Mantras in Tamil, வேத மந்திரங்கள். You can also save this post மஹா மிருத்யுஞ்சய மந்திரம் or bookmark it. Share it with your friends…