இந்த ஆன்மீக பதிவில் (தியாகராஜ அஷ்டகம்) – Thyagaraja Ashtakam Lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… தியாகராஜ அஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
1. கல்யாண ஸெளகந்திக புஷ்பஹார ஸம்சோபி கண்ட்டாய கலாத ராய
கல்யாண சைலேந்த்ர தனுர்தராய ஸ்ரீதியாகராஜாய நமோ நம
2. முக்தேந்த்ர நிலாதி ஸுரத்ன ராசி ஸம்ஸோபி சிம்ஹாஸன ஸம்ஸ்திதாய
முக்தா குமாராக்ய மகிஸ்துதாய ஸ்ரீதியாகராஜாய நமோ நமஸ்தே
3. கீசானன ஸ்ரீமுசுகுந்த பூப ஸம்ப்ரார்தனாத் பூதலமாக தாய
கோ சாந்தரஸ்தாய குமார பித்ரே ஸ்ரீதியாக ராஜாய நமோ நமஸ்தே
4. கோப்த்ரே பசூனாம் குரு ராஜரூப தர்த்ரேஸதாய ஸ்ரீபுர ஸம்ஸ்திதாய
குப்தஸ்வ காத்ராய ஹ்ருதய பஜாய, ஸ்ரீ தியாக ராஜாய நமோ நமஸ்தே
5. காந்தாதி ஸெளந்தர்ய ரதஸதிதாய காந்தா ஸமாச்லேஷித கந்தராய
காந்தார்த ரூபாய கஜாஸ்ய பித்ரே ஸ்ரீ தியாக ராஜாய நமோ நமஸ்தே
6. நிரந்தராப்யாஸ விசேஷ வேத்ய போது ஸ்வரூபாய நிரஞ்சனாய
நிரங்குசானந்த பதப்ரதாய ஸ்ரீதியாகராஜாய நமே நமஸ்தே
7. அனந்த ஹ்ருத் வாரிஜ ஹம்ஸ ரூப ந்ருத்தங் கரயாதி குருத்த மாய
அனந்த கல்யாண குணைக தாம்னே ஸ்ரீதியாகராஜாய நமோ நமஸ்தே
8. ஸ்ரீ மத்சிதானந்த குரு ஸ்வரூப ஸ்ரீதியாக ராஜங்கி ஸரோஜயக்மே
அனந்தபோது ப்ரதமஷ்ட காக்யம் ஸ்தோத்ரம் ஸுபக்த்யா க்ருத மர்பிதம் மயா
============
தியாகராஜ அஷ்டகம் பொருள் மற்றும் விளக்கம் | Thyagaraja Ashtakam Meaning Tamil
1. கல்யாண ஸெளகந்திக புஷ்பஹார ஸம்சோபி கண்ட்டாய கலாத ராய
கல்யாண சைலேந்த்ர தனுர்தராய ஸ்ரீதியாகராஜாய நமோ நம
பொருள்:மங்களமான சௌகந்திக மலர் மாலைகளின் மணத்தாலும் அழகினாலும் ஒளிரும் திருக்கழுத்தை உடையவர். நிலவைத் தலையில் சூடியவர். திரிபுராதி அசுரர்களைக் கொல்ல முற்பட்டபோது மேரு போன்ற மலையை வில்லாக ஏந்தி நின்றவர். இப்படிப்பட்ட பெருமைகளை உடைய ஸ்ரீ தியாகராஜருக்குப் போற்றி போற்றி.
2. முக்தேந்த்ர நிலாதி ஸுரத்ன ராசி ஸம்ஸோபி சிம்ஹாஸன ஸம்ஸ்திதாய
முக்தா குமாராக்ய மகிஸ்துதாய ஸ்ரீதியாகராஜாய நமோ நமஸ்தே
பொருள்:முத்து, இந்திர நீலம் போன்ற ஒளிமயமான நவரத்னங்கள் இழைக்கப்பெற்ற நவரத்ன சிம்மாசனத்தில் வீற்றிருப்பவராகிய தியாகராஜப் பெருமானை முத்து குமாரசாமி என்ற அடியேன் போற்றுகின்றேன்.
3. கீசானன ஸ்ரீமுசுகுந்த பூப ஸம்ப்ரார்தனாத் பூதலமாக தாய
கோ சாந்தரஸ்தாய குமார பித்ரே ஸ்ரீதியாக ராஜாய நமோ நமஸ்தே
பொருள்:வானர முகமுடைய முசுகுந்தச் சக்ரவர்த்தியின் பிரார்த்தனைக்கு இணங்க விண்ணை விட்டு இந்த மண்ணுலகுக்கு வந்தவரும், பாதுகாப்பான கவசம் போன்ற பெட்டகத்திலேயிருப்பவரும், முருகனின் தந்தையுமான ஸ்ரீதியாக ராஜரே தங்களுக்கு என் பணிவான வணக்கம்.
4. கோப்த்ரே பசூனாம் குரு ராஜரூப தர்த்ரேஸதாய ஸ்ரீபுர ஸம்ஸ்திதாய
குப்தஸ்வ காத்ராய ஹ்ருதய பஜாய, ஸ்ரீ தியாக ராஜாய நமோ நமஸ்தே
பொருள்: சகல ஜீவ ராசிகளையும் காப்பாற்றும் பசுபதியும்; மிகச் சிறந்த குருவடிவம் எடுத்து அநேக பெரியோர்களின் சுத்த சத்குருவாக விளங்குபவரும்; ஸ்ரீபுரம் எனப்படும் கமலாம்பிகையின் நகரத்தில் விளங்குபவரும்; தன்னுடைய வடிவத்தை மறைத்துக் கொண்டிருப்பவருமாகிய தியாகராஜரே உமக்கு என் நமஸ்காரங்கள்.
5. காந்தாதி ஸெளந்தர்ய ரதஸதிதாய காந்தா ஸமாச்லேஷித கந்தராய
காந்தார்த ரூபாய கஜாஸ்ய பித்ரே ஸ்ரீ தியாக ராஜாய நமோ நமஸ்தே
பொருள்:தன் இனிய மனையாளான ஸ்ரீ கமலாம்பிகையின் பேரெழில் நிறைந்த புன்னகையில் ஒளிர்பவரும், அந்த அம்பிகைக்காக தனது ஒரு பாதியைப் பகிர்ந்து கொடுத்தவரும், கணங்களின் தலைவராகிய கணபதியைப் பெற்ற ஸ்ரீ தியாராஜருக்குப் போற்றியோ போற்றி !
6. நிரந்தராப்யாஸ விசேஷ வேத்ய போது ஸ்வரூபாய நிரஞ்சனாய
நிரங்குசானந்த பதப்ரதாய ஸ்ரீதியாகராஜாய நமே நமஸ்தே
பொருள் :விடாது தொடர்ந்து ஆராதிக்கப்பட்டால் மட்டுமே தனது சூட்சுமமான வடிவத்தின் ரகசியங்களை உணரச் செய்பவரும், சிறப்பான முறையில் அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இன்பமுறச் செய்பவரும், தடைகளற்ற போக போக்கியங்களையும் உன்னதமான பதத்தையும் அளிக்க வல்லவருமான தியாகராஜப் பெருமானுக்கு என் வந்தனங்கள்.
7. அனந்த ஹ்ருத் வாரிஜ ஹம்ஸ ரூப ந்ருத்தங் கரயாதி குருத்த மாய
அனந்த கல்யாண குணைக தாம்னே ஸ்ரீதியாகராஜாய நமோ நமஸ்தே
பொருள் :பாற்கடலில் சயனித்திருக்கும் பகவான் விஷ்ணுவால் முன்னம் மனத்துள் வைத்து பூஜிக்கப்பட்டபோது, அவரது உள்சுவாசம் வெளி சுவாசத்திற்கேற்ப பன்னெடுங்காலம் வசித்துக் (நடனமாடிக்) கொண்டிருந்தவர். அவரது அப்போதைய அசைவே ஆடலாகப் பரிணமித்தது. ஆக பரந்தாமனின் எல்லையற்ற இதயக் கடலில் அன்றலர்ந்த தாமரையின் மேல் அன்னப் பறவையைப் போன்ற அழகிய ஹம்ஸ நடனம் ஆயிற்று. ( இதை அஜபா நடனம் என்றும் சொல்வர்) அப்படிப்பட்ட ஆடலின் நாயகனும் மிகவும் போற்றுதலுக்குரிய பெருமை மிக்க பரமகுருவும் எல்லையற்ற மங்கள சொரூபியுமான தியாகராஜரைப் போற்றுகிறேன்.
8. ஸ்ரீ மத்சிதானந்த குரு ஸ்வரூப ஸ்ரீதியாக ராஜங்கி ஸரோஜயக்மே
அனந்தபோது ப்ரதமஷ்ட காக்யம் ஸ்தோத்ரம் ஸுபக்த்யா க்ருத மர்பிதம் மயா
பொருள் : சச்சிதானந்த வடிவினராக குருவாகத் தோற்றமளிக்கும் ஸ்ரீதியாகராஜருடைய சீரடிகளில், பரமானந்தத்தை அளிக்கவல்ல இந்த அஷ்டகம் பக்தியோடு சமர்ப்பிக்கப்படுகிறது. அகத்தூய்மையுடன் அர்ப்பணிக்கப்படும் இந்தத் துதியால் மகிழ்ந்து மங்களங்கள் யாவும் அவரால் அளிக்கப்படும் என்பது நிச்சயம் என்ற மனநிறைவோடு, இத்துதியை நிறைவு செய்கிறேன்.
(thyagarajar ashtakam tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Ashtakam, சிவன் பாடல்கள், சிவன் பாடல் வரிகள். You can also save this post தியாகராஜ அஷ்டகம் or bookmark it. Share it with your friends…