இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ ஷ்யாமலா ஸ்தோத்ரம்) – Sri Shyamala Stotram in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ ஷ்யாமலா ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
ஜய மாதர்விஶாலாக்ஷீ ஜய ஸங்கீ³தமாத்ருகே |
ஜய மாதங்கி³ சண்டா³லி க்³ருஹீதமது⁴பாத்ரகே || 1 ||
நமஸ்தேஸ்து மஹாதே³வி நமோ ப⁴க³வதீஶ்வரீ |
நமஸ்தேஸ்து ஜக³ன்மாதர்ஜய ஶங்கரவல்லபே⁴ || 2 ||
ஜய த்வம் ஶ்யாமலேதே³வீ ஶுகஶ்யாமே நமோஸ்துதே |
மஹாஶ்யாமே மஹாராமே ஜய ஸர்வமனோஹரே || 3 ||
ஜய நீலோத்பலப்ரக்²யே ஜய ஸர்வவஶங்கரி |
ஜய த்வஜாத்வஸம்ஸ்துத்யே லகு⁴ஶ்யாமே நமோஸ்துதே || 4 ||
நமோ நமஸ்தே ரக்தாக்ஷி ஜய த்வம் மத³ஶாலினி |
ஜய மாதர்மஹாலக்ஷ்மி வாகீ³ஶ்வரி நமோஸ்துதே || 5 ||
நம இந்த்³ராதி³ஸம்ஸ்துத்யே நமோ ப்³ரஹ்மாதி³பூஜிதே |
நமோ மரகதப்ரக்²யே ஶங்க²குண்ட³லஶோபி⁴தே || 6 ||
ஜய த்வம் ஜக³தீ³ஶானி லோகமோஹினி தே நம꞉ |
நமஸ்தேஸ்து மஹாக்ருஷ்ணே நமோ விஶ்வேஶவல்லபே⁴ || 7 ||
மஹேஶ்வரி நமஸ்தேஸ்து நீலாம்ப³ரஸமன்விதே |
நம꞉ கள்யாணி க்ருஷ்ணாங்கி³ நமஸ்தே பரமேஶ்வரீ || 8 ||
மஹாதே³வப்ரியகரி நமஸ்ஸர்வவஶங்கரி |
மஹாஸௌபா⁴க்³யதே³ ந்ரூணாம் கத³ம்ப³வனவாஸினி || 9 ||
ஜய ஸங்கீ³தரஸிகே வீணாஹஸ்தே நமோஸ்துதே |
ஜனமோஹினி வந்தே³ த்வாம் ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாத்மிகே || 10 ||
வாக்³வாதி³னி நமஸ்துப்⁴யம் ஸர்வவித்³யாப்ரதே³ நம꞉ |
நமஸ்தே குலதே³வேஶி நமோ நாரீவஶங்கரி || 11 ||
அணிமாதி³கு³ணாதா⁴ரே ஜய நீலாத்³ரிஸன்னிபே⁴ |
ஶங்க²பத்³மாதி³ஸம்யுக்தே ஸித்³தி⁴தே³ த்வாம் ப⁴ஜாம்யஹம் || 12 ||
ஜய த்வம் வரபூ⁴ஷாங்கி³ வராங்கீ³ம் த்வாம் ப⁴ஜாம்யஹம் |
தே³வீம் வந்தே³ யோகி³வந்த்³யே ஜய லோகவஶங்கரி || 13 ||
ஸர்வாலங்காரஸம்யுக்தே நமஸ்துப்⁴யம் நிதீ⁴ஶ்வரி |
ஸர்க³பாலனஸம்ஹாரஹேதுபூ⁴தே ஸனாதனி || 14 ||
ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலப்ரபே⁴ |
ப⁴ஜே ஶக்ராதி³வந்த்³யே த்வாம் ஜய த்வம் பு⁴வனேஶ்வரி || 15 ||
ஜய த்வம் ஸர்வப⁴க்தானாம் ஸகலாபீ⁴ஷ்டதா³யினி |
ஜய த்வம் ஸர்வப⁴த்³ராங்கீ³ ப⁴க்தா(அ)ஶுப⁴வினாஶினி || 16 ||
மஹாவித்³யே நமஸ்துப்⁴யம் ஸித்³த⁴லக்ஷ்மி நமோஸ்துதே |
ப்³ரஹ்மவிஷ்ணுஶிவஸ்துத்யே ப⁴க்தானாம் ஸர்வகாமதே³ || 17 ||
மாதங்கீ³ஶ்வரவந்த்³யே த்வாம் ப்ரஸீத³ மம ஸர்வதா³ |
இத்யேதச்ச்²யாமலாஸ்தோத்ரம் ஸர்வகாமஸம்ருத்³தி⁴த³ம் || 18 ||
ஶுத்³தா⁴த்மா ப்ரஜபேத்³யஸ்து நித்யமேகாக்³ரமானஸ꞉ |
ஸ லபே⁴த்ஸகலான்காமான் வஶீகுர்யாஜ்ஜக³த்த்ரயம் || 19 ||
ஶீக்⁴ரம் தா³ஸா ப⁴வந்த்யஸ்ய தே³வா யோகீ³ஶ்வராத³ய꞉ |
ரம்போ⁴ர்வஶ்யாத்³யப்ஸரஸாமவ்யயோ மதி³னோ ப⁴வேத் || 20 ||
ந்ருபாஶ்ச மர்த்யா꞉ ஸர்வே(அ)ஸ்ய ஸதா³ தா³ஸா ப⁴வந்தி ஹி |
லபே⁴த³ஷ்டகு³ணைஶ்வர்யம் தா³ரித்³ர்யேண விமுச்யதே || 21 ||
ஶங்கா²தி³ நித⁴யோத்³வார்த்²ஸாஸ்ஸான்னித்⁴யம் பர்யுபாஸதே |
வ்யாசஷ்டே ஸர்வஶாஸ்த்ராணி ஸர்வவித்³யானிதி⁴ர்ப⁴வேத் || 22 ||
விமுக்த꞉ ஸகலாபத்³பி⁴꞉ லபே⁴த்ஸம்பத்தி முத்தமாம் |
மஹாபாபோபபாபௌகை⁴ஸ்ஸஶீக்⁴ரம் முச்யதே நர꞉ || 23 ||
ஜாதிஸ்மரத்வமாப்னோதி ப்³ரஹ்மஜ்ஞானமனுத்தமம் |
ஸதா³ஶிவத்வமாப்னோதி ஸோந்தே நாத்ர விசாரணா || 24 ||
இதி ஸ்ரீ ஶ்யாமலா ஸ்தோத்ரம் ||
============
ஸ்ரீ ஷ்யாமலா ஸ்தோத்ரம் விளக்கம் | Sri Shyamala Stotram Explained in Tamil
ஷ்யாமலா ஸ்தோத்திரம் என்பது தசமஹாவித்யாக்களில் ஒருவரான ஷியாமலா தேவி அல்லது மாதங்கி தேவியை நோக்கிய பிரார்த்தனை.
லோக மாதா ஸ்ரீ ராஜமாதங்கி என்னும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி ஸ்ரீ வித்யா உபாஸனையில் பிரதானமாக விளங்குபவள். ஞானம், வித்தை மற்றும் கலைகளின் அதிபதி. கேட்போருக்கு கேட்டவற்றை அள்ளி தரும் கற்பக வ்ருக்ஷம். நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள ‘விசுத்தி’ சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.
மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம், ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம், பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும். மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள். கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள்.
(shyamala stotram tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lalithambigai Songs, லலிதாம்பிகை பாடல்கள், 108 போற்றிகள். You can also save this post ஸ்ரீ ஷ்யாமலா ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…