இந்த ஆன்மீக பதிவில் (நமசிவாய மந்திரம்) – Namachivaya Mantra Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நமசிவாய மந்திரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
நமசிவாய மந்திரம் – பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் வரிகள் – Namachivaya Mantra Tamil Lyrics Tamil
============
நமசிவாய மந்திரம்
நமசிவாய நமசிவாய நமசிவாய மந்திரம்
நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரம்
ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம்
ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம்
நைந்து வாழும் மக்களுக்கு நோய்நொடியைப் போக்கிட
நன்மருந்தைத் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் (நம)
வைத்தியராய்ப் பணிபுரிந்து வையகத்தைக் காக்கவே
வைத்தியநாதனாய் வந்துதித்தான் சங்கரன்
வைத்தியமும் பாதகமும் இங்கு வந்து சேராமல்
பனிபோல் விலக வைக்கும் நமசிவாய மந்திரம் (நம)
தந்தை தாயும் தனயனோடு வாழுகின்ற வீடிது
சந்தனமும் பன்னீரும் கமகமக்கும் நாடிது
விந்தையோடு வியாதியெல்லாம் வேகமாக ஓடவே
வெற்றிவேலன் துணை இருக்கும் வீரசேகர் மந்திரம் (நம)
புள்ளிருக்கும் வேளூரெனப் புனிதமிகு பூமியாம்
பூதநாத கணங்களுக்கும் கனிவு காட்டும் சாமியாம்
வள்ளி தெய்வானையோடு வரங்கொடுக்கும் முருகனை
வளர்த்தெடுத்து நமக்களித்த அம்மையப்பன் மந்திரம் (நம)
(namachivaya mantra tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை. You can also save this post நமசிவாய மந்திரம் or bookmark it. Share it with your friends…