இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் – 26-31) – Title : ஆதித்ய ஹ்ருதயம் -26-31 | tamilgod.org பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆதித்ய ஹ்ருதயம் – 26-31 ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஆதித்ய ஹ்ருதயத்தின் இறுதிப்பகுதி – 26 முதல் 31 வரையிலான சுலோகங்கள். Aditya Hrudhayam Stotram / Sloka from 26-31 lyrics in tamil – Devotional hymn to Aditya or the Sun God (Surya) and was recited by the sage Agastya to Rāma Tamil Lyrics

============

ஆதித்ய ஹ்ருதயம் (26 முதல் 31 வரை)

பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்

ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

PuujayasvainamEkaakrO dEvadEvam jagathpathim

yEthath thrikuNitham japthvaa yuththEshu vijayishyasi

தேவதேவம் – தேவர்களுக்கும் தெய்வமானவனை

ஜகத்பதிம் – உலகத்தை உடையவனை

பூஜயஸ்வைனம் ஏகாக்ரோ – ஒரு நிலைப்பட்ட மனத்துடன் வணங்குவாய்.

ஏதத் – இந்த ஸ்தோத்திரத்தை

த்ரிகுணிதம் ஜப்த்வா – மும்முறை ஜபித்து

யுத்தேஷு – போரில்

விஜயிஷ்யஸி – வெற்றி பெறுவாய்

அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி

ஏவம் உக்த்வா ததா அகஸ்த்யோ ஜகாம ச யதா கதம்

asminkshanE mahAbhAhO rAvanam thvam vadhishyasi

yEvam ukthvA thathAkaSthyO jakAma cha yathA gatham

அஸ்மின் க்ஷணே – இந்த நொடியிலேயே

மஹாபாஹோ – பெரும் தோள்வலிமை உடையவனே

ராவணம் த்வம் வதிஷ்யஸி – இராவணனை நீ வதைப்பாய்

ஏவம் உக்த்வா – இப்படி சொல்லிவிட்டு

ததா அகஸ்த்யோ – அங்கிருந்த அகத்தியர்

ஜகாம ச யதா கதம் – எப்படி வந்தாரோ அப்படியே சென்றார்

ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத் ததா

தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவாந்

yEthas sruthvA mahAthEjA nashta sOkO bhavath thadhA

dhArayamAsa suprIthO rAghava: prayathAthmavAn

ஏதச் ச்ருத்வா – இதனைக் கேட்டு (இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்ரத்தைக் கேட்டு)

மஹாதேஜா – பெரும் வலிமையுள்ளவனும்

தாரயாமாஸ – நோக்கத்தில் உறுதியுள்ளவனும்

சுப்ரீதோ – மிகவும் மகிழ்ந்தவனும்

ராகவ: ப்ரயதாத்மவாந் – முயற்சிகளில் சிறந்தவனும் ஆன இராகவன்

நஷ்ட சோகோ பவத் ததா – அப்போதே கவலைகள் எல்லாம் நீங்கியவன் ஆனான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்சம் அவாப்தவாந்

த்ரிர் ஆசம்ய சுசிர்பூத்வா தநுர் ஆதாய வீர்யவாந்

Adityam prEkshya japthvA thu param harsam avApthavAn

thrirAsamya shuchir bhUthvA dhanur AthAya vIryavAn

த்ரிர் ஆசம்ய – மும்முறை ஆசமனீயம் செய்து

சுசிர்பூத்வா – சுத்தமடைந்த உடலினை அடைந்தான்

தநுர் ஆதாய – வில்லை ஏந்தியவன்

வீர்யவாந் – வீரத்தில் சிறந்தவன்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து – ஆதித்யனைப் பார்த்துக் கொண்டே (இந்த ஸ்தோத்ரத்தை) ஜபித்து

பரம் ஹர்சம் அவாப்தவாந் – மிகவும் மேலான மகிழ்ச்சியை அடைந்தான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்

ஸர்வ யத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

rAvanam prEkshya hrustAthmA yudhdhAya samupAgamath

sarva yathnEna mahataa vadhE thasya dhruthObhavath

ஹ்ருச்டாத்மா யுத்தாய ஸமுபாகமத் – போர் செய்யும் நோக்கத்துடன் வரும்

ராவணம் ப்ரேக்ஷ்ய – இராவணனைப் பார்த்து

ஸர்வ யத்னேன மஹதா – மேலான எல்லா முயற்சிகளுடனும்

வதே தஸ்ய த்ருதோபவத் – அவனை (இராவணனை) வதைப்பதற்கான உறுதியைக் கொண்டான் (இராகவன்).

அத ரவி ரவதந் நிரீக்ஷ்ய ராமம்

முதிதமநா பரமம் ப்ரஹ்ருஷ்யமான:

நிசிசரபதி சம்க்ஷயம் விதித்வா

சுரகண மத்யகதோ வசஸ்த்வரேதி

atha ravi ravadan nirIkshya rAmam

mudhithamanA paramam prahrishyamAna:

nishicharapatir samkshayam vidithvA

suragana madhyagatO vachastvarEti

அத – அப்போது

சுரகண மத்யகதோ – தேவர்கள் கூட்டத்தின் நடுவில் இருந்த

ரவி – சூரியன்

முதிதமநா – மிகவும் மகிழ்ந்த மனத்துடன்

பரமம் ப்ரஹ்ருஷ்யமான: – மிக உயர்ந்த திருப்தியை அடைந்தவனாக

நிசிசரபதி – இரவில் திரிபவர்களான அரக்கர்களின் தலைவனான இராவணனின்

சம்க்ஷயம் விதித்வா – அழிவு நேரம் நெருங்கி விட்டதை அறிந்து

ரவதந் நிரீக்ஷ்ய ராமம் – ‘விரைவில் நடத்துவாய் இராமா’

வசஸ்த்வரேதி – என்று சொன்னான்.

இதி ச்ரிமத் ராமாயணே வால்மீகியே ஆதிகாவ்யே ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

இத்துடன் ஸ்ரீமத் இராமாயணத்தில் வால்மீகி இயற்றிய முதல் காவியத்தில் இருக்கும் ஆதித்ய ஹிருதயம் என்ற ஸ்தோத்திரம் நிறைவடைந்தது.

(aditya hrudhayam stotram 26 31) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Stotram, Mantras, Surya Deva Songs, சூரிய‌ தேவன் பாடல்கள், Aditya Hridayam. You can also save this post ஆதித்ய ஹ்ருதயம் – 26-31 or bookmark it. Share it with your friends…

Leave a Comment