Anbe Anbe Kollathe Song Lyrics In Tamil

Anbe Anbe Kollathe Song Lyrics song is from the movie Jeans which was released in the year 1998 and it was sung by the singers Hariharan. The lyrics of this song Anbe Anbe Kollathe Song Lyrics was written by Vairamuthu and music composed by A.R.Rahman. Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Prashanth, Aishwarya Rai, Nassar, Lakshmi, and Raadhika
திரைப்படம் : Jeans
இசையமைப்பாளர் : A.R.Rahman
பாடலாசிரியர் : Hariharan
எழுத்தாளர் : Vairamuthu
வருடம் : 1998
=================

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரை குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் காஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

மின்னலை பிடித்து தூரிகை சமைத்து
ரவி வர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிகை ஆறடி ஆக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கால் கொலுசே
கால் அழகி சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகை சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன் உயிர் காக்க என் உயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறை இடுவேன்

மேகத்தை பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மார்பில் வேர்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ண பறவை குளிப்பதற்காக
பனி துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரை குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரை குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் காஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

மின்னலை பிடித்து தூரிகை சமைத்து
ரவி வர்மன் எழுதிய வதனமடி
நூறடி பளிகை ஆறடி ஆக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்த கால் கொலுசே
கால் அழகி சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகை சொல்வாயா

Anbe Anbe Kollathe Video Song

Anbe Anbe Kollathe Song Lyrics from Jeans | Anbe Anbe Kollathe பாடல் வரிகள் in tamil

Leave a Comment