இந்த ஆன்மீக பதிவில் (நந்தீஸ்வரர் 108 போற்றி) – 108 nandhi potri | Pradosham Nandi Potri tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… நந்தீஸ்வரர் 108 போற்றி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

பிரதோஷ நந்தி 108 போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அறத்தின் உருவே போற்றி

ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி

ஓம் அரனுக்குக் காவலனே போற்றி

ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி

ஓம் அம்பலக் கூத்தனே போற்றி

ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி

ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி

ஓம் இடபமே போற்றி

ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி

ஓம் ஈகை உடையவனே போற்றி

ஓம் உலக ரட்சகனே போற்றி

ஓம் உபதேச காரணனே போற்றி

ஓம் ஊக்க முடையவனே போற்றி

ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி

ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி

ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி

ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி

ஓம் ஒப்பில்லாதவனே போற்றி

ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி

ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி

ஓம் கல்யாண மங்களமே போற்றி

ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி

ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி

ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி

ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி

ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி

ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் களைவாய் போற்றி

ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி

ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி

ஓம் கைலாச வாகனனே போற்றி

ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி

ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி

ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி

ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி

ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி

ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி

ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி

ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி

ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி

ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி

ஓம் மகாதேவனே போற்றி

ஓம் மகிமை பல செய்வாய் போற்றி

ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி

ஓம் மங்கள நாயகனே போற்றி

ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி

ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி

ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி

ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி

ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி

ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி

ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி

ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி

ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி

ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி

ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி

ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி

ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி

ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி

ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி

ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி

ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி

ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி

ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி

ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி

ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி

ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி

ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி

ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி

ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

ஓம் வித்யா காரணனே போற்றி

ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி

ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி

ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி

ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி

ஓம் வேல்உடையவனே போற்றி

ஓம் மகா காளனே போற்றி

ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி

ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி

ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி

ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி

ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி

ஓம் ஊடலுக்குதவியனே போற்றி

ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி

ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி

ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி

ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி

ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி

ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

ஓம் மகாதேவன் கருணையே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி

ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி

ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி

ஓம் கையிலையின் காவலனே போற்றி

ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி

ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…

============

நந்தீஸ்வரர் 108 போற்றி

============

நந்தீஸ்வரர் வழிபாடு பலன்கள்

============

Nandi worship at Pradosha Time Significance

நந்தி தேவனுக்கு பாலில் அபிஷேகம் செய்தால் உடல்நலம் மேம்படும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

சந்தனத்தில் அபிஷேகம் செய்ய அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கும், அதிகாரமும் உள்ள பதவி கிடைக்கும்.

மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்தால் திருமணத் தடைப்பட்டு இருப்போருக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.

நந்திக்கு பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்ய கடன் தொல்லை நீங்கும். தீராத வியாதிகள் தீரும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு பாக்கியம் கிடைக்கும்.

பன்னீர் அபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும். சஞ்சலமான மனம் அமைதியடையும். மகிழ்ச்சி பெறுகும். குடும்ப வாழ்க்கை சிறக்கும்.

இளநீர் அபிஷேகம் செய்தால் குடும்பப் பிரச்னையால் இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்கும். நீண்ட நாட்கள் இழுவையில் இருந்த வழக்குகளில் வெற்றி பெறலாம்.

வாசனை திரவிய அபிஷேகத்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும்.

நந்திக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் உயர்வான கல்வி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

(108 nandhi potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song, Pradosham nandi songs lyrics. You can also save this post நந்தீஸ்வரர் 108 போற்றி or bookmark it. Share it with your friends…

Leave a Comment