இந்த ஆன்மீக பதிவில் (108 பெருமாள் போற்றி) – 108 Perumal Potri பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… 108 பெருமாள் போற்றி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

பெருமாளை போற்றி இயற்றப்பட்ட 108 துதி இது. இந்த 108 போற்றி துதிகளையும் புதன் கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 108 போற்றி துதிகளை பாடி பெருமாளின் அனுகிரகத்தினை பெறுங்கள்.

============

108 பெருமாள் போற்றி

ஓம் அப்பா போற்றி

ஓம் அறமே போற்றி

ஓம் அருளே போற்றி

ஓம் அச்சுதா போற்றி

ஓம் அரவ சயனா போற்றி

ஓம் அரங்கமா நகராய் போற்றி

ஓம் அற்புத லீலா போற்றி

ஓம் ஆறுமுகனின் அம்மான் போற்றி

ஓம் அனுமந்தன் தேவே போற்றி

ஓம் ஆதியே அனாதி போற்றி

ஓம் ஆழ்வார்கள் தொழுவாய் போற்றி

ஓம் ஆதி மூலனே போற்றி

ஓம் ஆபத்துச் சகாயா போற்றி

ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி

ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி

ஓம் உமையம்மை அண்ணா போற்றி

ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி

ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி

ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி

ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி

ஓம் எண்குண சீலா போற்றி

ஓம் ஏழைப்பங்காளா போற்றி

ஓம் எழில்நிற வண்ணா போற்றி

ஓம் எழில்மிகு தேவே போற்றி

ஓம் கலியுக வரதா போற்றி

ஓம் கண்கண்ட தேவே போற்றி

ஓம் கருடவா கனனே போற்றி

ஓம் கல்யாணமூர்த்தி போற்றி

ஓம் காமரு தேவே போற்றி

ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி

ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி

ஓம் கோவிந்தா-முகுந்தா போற்றி

ஓம் சர்வலோ கேசா போற்றி

ஓம் சாந்தகுண சீலா போற்றி

ஓம் சீனிவாசா போற்றி

ஓம் சிங்காரமூர்த்தி போற்றி

ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி

ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி

ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி

ஓம் தரணியைக் காப்பாய் போற்றி

ஓம் திருமகள் மணாளா போற்றி

ஓம் திருமேனி உடையாய் போற்றி

ஓம் திருவேங்கடவா போற்றி

ஓம் திருமலைக் கொழுந்தே போற்றி

ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி

ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி

ஓம் கடலமு தளித்தாய் போற்றி

ஓம் நந்தகோ பாலா போற்றி

ஓம் நான்முகன் பிதாவே போற்றி

ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி

ஓம் நவமணி தரிப்பாய் போற்றி

ஓம் நரசிம்ம தேவே போற்றி

ஓம் நான்மறை தொழுவாய் போற்றி

ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி

ஓம் பாவலர் பணிவாய் போற்றி

ஓம் தசாவ தாரா போற்றி

ஓம் தயாநிதி -ராமா போற்றி

ஓம் தந்தை சொல் காத்தாய் போற்றி

ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி

ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி

ஓம் பரதனுக்கீந்தாய் போற்றி

ஓம் பாண்டவர் துணைவா போற்றி

ஓம் பரந்தாமா- கண்ணா போற்றி

ஓம் பாஞ்சாலி மானம் காத்த பார்புகழ் தேவே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தி போற்றி

ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி

ஓம் வாமன வரதா போற்றி

ஓம் உலகினை அளந்தாய் போற்றி

ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி

ஓம் பரகதி அருள்வாய் போற்றி

ஓம் துருவனும் தொழுவாய் போற்றி

ஓம் சபரியின் கனியே போற்றி

ஓம் துருவநிலை தந்தாய் போற்றி

ஓம் நற்கதி தந்தாய் போற்றி

ஓம் வையகம் புகழ்வாய் போற்றி

ஓம் வைகுண்ட வாசா போற்றி

ஓம் முழுமதி வதனா போற்றி

ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி

ஓம் கமலக் கண்ணா போற்றி

ஓம் கலைஞான மருள்வாய் போற்றி

ஓம் கஸ்தூரி திலகா போற்றி

ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி

ஓம் பவளம் போல் வாயா போற்றி

ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி

ஓம் நான்கு புயத்தாய் போற்றி

ஓம் நற்கதி அருள்வாய் போற்றி

ஓம் சங்குசக் கரனே போற்றி

ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி

ஓம் கோபிகள் லோலா போற்றி

ஓம் கோபமும் தணிப்பாய் 90 போற்றி

ஓம் வேணுகோ பாலா போற்றி

ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி

ஓம் புருடோத் தமனே போற்றி

ஓம் பொன் புகழ் அருள்வாய் போற்றி

ஓம் மாயா வினோதா போற்றி

ஓம் மனநிலை தருவாய் போற்றி

ஓம் விஜயரா கவனே போற்றி

ஓம் வினையெல்லாம் ஒழிப்பாய் போற்றி

ஓம் பதும நாபனே போற்றி

ஓம் பதமலர் தருவாய் போற்றி

ஓம் பார்த்தசா ரதியே போற்றி

ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி

ஓம் கரிவரத ராஜா போற்றி

ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி

ஓம் சுந்தர ராஜா போற்றி

ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி

ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி

ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி

(108 perumal potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Vishnu songs, பெருமாள் பாடல்கள். You can also save this post 108 பெருமாள் போற்றி or bookmark it. Share it with your friends…

Leave a Comment