இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் – 1) – Title : ஆதித்ய ஹ்ருதயம் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஆதித்ய ஹ்ருதயம் – 1 ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பதாக நம்பப்படுகிறது. Aditya Hrudhayam Stotram / Sloka lyrics in tamil – Devotional hymn to Aditya or the Sun God (Surya) and was recited by the sage Agastya to Rāma Tamil Lyrics
============
ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1
(tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1)
ததோ – அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் – போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் – போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா – முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் – போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா – இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்
போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.
தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2
(daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2)
த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் – போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச – தேவர்களுடனே
சம ஆகம்ய – வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: – ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்
தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.
ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3
rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3
ராம ராம மஹாபாஹோ – பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் – எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி – போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் – காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் – (அந்த) இரகசியத்தை
ச்ருணு – கேள்
வத்ஸ – குழந்தாய்
தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4
Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4
ஆதித்ய ஹ்ருதயம் – (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் – அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் – எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் – வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் – நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் – அழிவற்றது
பரமம் – மிகப்பெருமை கொண்டது
சிவம் – மங்களம் தருவது
புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5
sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5
ஸர்வ மங்கள் மாங்கல்யம் – மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் – எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் – கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் – வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் – சிறந்தது
இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.
(aditya hrudhayam stotram) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Stotram, Mantras, Surya Deva Songs, சூரிய தேவன் பாடல்கள், Aditya Hridayam. You can also save this post ஆதித்ய ஹ்ருதயம் – 1 or bookmark it. Share it with your friends…