இந்த ஆன்மீக பதிவில் (அனுமான் 108 போற்றி | Hanuman 108 potri in tamil | 108 Hanuman potri) – சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் இந்த 108 தமிழ் போற்றிகளை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான்! பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அனுமான் 108 போற்றி | Hanuman 108 potri in tamil | 108 Hanuman potri ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

1. ஓம் அனுமனே போற்றி

2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

3. ஓம் அறக்காவலனே போற்றி

4. ஓம் அவதார புருஷனே போற்றி

5. ஓம் அறிஞனே போற்றி

6. ஓம் அடக்கவடிவே போற்றி

7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி

10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

15. ஓம் இசை ஞானியே போற்றி

16. ஓம் இறை வடிவே போற்றி

17. ஓம் ஒப்பிலானே போற்றி

18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

19. ஓம் கதாயுதனே போற்றி

20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

22. ஓம் கர்மயோகியே போற்றி

23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

25. ஓம் கடல் தாவியவனே போற்றி

26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

29. ஓம் கூப்பிய கரனே போற்றி

30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

39. ஓம் சூராதி சூரனே போற்றி

40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

44. ஓம் சோக நாசகனே போற்றி

45. ஓம் தவயோகியே போற்றி

46. ஓம் தத்துவஞானியே போற்றி

47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி

48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

49. ஓம் தீதழிப்பவனே போற்றி

50. ஓம் தீயும் சுடானே போற்றி

51. ஓம் நரஹரியானவனே போற்றி

52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி

54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி

55. ஓம் பண்டிதனே போற்றி

56. ஓம் பஞ்சமுகனே போற்றி

57. ஓம் பக்தி வடிவனே போற்றி

58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

66. ஓம் பீம சோதரனே போற்றி

67. ஓம் புலனை வென்றவனே போற்றி

68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

69. ஓம் புண்ணியனே போற்றி

70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

71. ஓம் மதி மந்திரியே போற்றி

72. ஓம் மனோவேகனே போற்றி

73. ஓம் மாவீரனே போற்றி

74. ஓம் மாருதியே போற்றி

75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

79. ஓம் ராமதாசனே போற்றி

80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

81. ஓம் ராமதூதனே போற்றி

82. ஓம் ராம சோதரனே போற்றி

83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

93. ஓம் லங்கா தகனனே போற்றி

94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

96. ஓம் வாயுகுமாரனே போற்றி

97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

101. ஓம் விஸ்வரூபனே போற்றி

102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

============

அனுமன் 108 போற்றிகளின் மகிமை

ஸ்ரீ ராம பக்தரான ஆஞ்சநேயரை போற்றி வணங்குபவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் என்பது வராது. என்றும் சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயர் இவ்வுலகில் ராமருடைய பக்தர்களுக்கு இன்றும் கண்கண்ட தெய்வமாக அருள் புரிகின்றார் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. அவருடைய இந்த 108 தமிழ்ப் போற்றிகளை சனிக்கிழமையில் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நெருங்காது. வருகின்ற துயரமும் எளிதாக நீங்கிவிடும்! அத்தகைய ஆஞ்சநேயருடைய 108 போற்றிகளை பாடி அனுமனின் அருளைப் பெற்றிடுங்கள்.

(hanuman 108 potri tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Mantras, Jai Hanuman Songs, ஹனுமான் பாடல் வரிகள், Stotram, பாடல் வரிகள், 108 போற்றிகள். You can also save this post அனுமான் 108 போற்றி | Hanuman 108 potri in tamil | 108 Hanuman potri or bookmark it. Share it with your friends…

Leave a Comment