Categories: Devotional Songs

ஹரிவராசனம் பாடல் விளக்கம் | harivarasanam song meaning tamil

இந்த ஆன்மீக பதிவில் (ஹரிவராசனம் பாடல் விளக்கம்) – Harivarasanam Meaning Explained in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஹரிவராசனம் பாடல் விளக்கம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சபரிமலை யாத்திரையில் அனைவரும் கேட்கின்ற‌ கீர்த்தனம் ஹரிவராசனம் ஆகும். சபரிமலையில் ஒவ்வொரு நாள் இரவு வேளையில் நடை சாத்தப்படும்போது பாடப்படும் பக்திப் பாடல் ஹரிவராசனம் ஆகும். இது சபரிமலை வாசனான‌ ஐயப்பனை உறங்க வைப்பதற்காக பாடப்படும் தாலாட்டுப் பாடலாகும். ஹரிவராசனம் பாடல் கேட்டிருப்போம், அதன் பொருள் என்னவென்று தெரிந்துகொள்ள‌ ஆவல் உள்ளதா ? அப்படியானால் இந்த‌ பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

============

Harivarasanam Song Lyrics in Tamil with Meaning | ஹரிவராசனம் பாடல் வரிகள் விளக்கம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்

அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அரியாகிய திருமாலின் ஆசிகள் நிறைந்தவர், பேரண்டத்தை இயக்குபவர், அரியின் அருளின் சாராம்சமாக இருப்பவர், உமது தெய்வீகப் பாதங்களை வணங்குகிறோம். தீயசிந்தனைகளை அழிப்பவரே, இந்த அண்டத்தை ஆள்பவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

சரணகீர்த்தனம் பக்தமானஸம்

பரணலோலுபம் நர்த்தனாலயம்

அருணபாசுரம் பூதநாயகம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரண் அடைவோரின் பாடலை விரும்புபவர், பக்தர்களின் மனதில் நிறைந்தவர், பக்தர்களை ஆள்பவர், ஆடலை விரும்புபவர். உதிக்கும் சூரியன் போல பிரகாசிப்பவரே உயிர்களின் வேந்தரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பிரணயசத்யகம் பிராணநாயகம்

ப்ரணதகல்பகம் சுப்ரபாஞ்சிதம்

பிரணவமந்திரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

உண்மையின் உணர்வாக இருப்பவர், எல்லா உள்ளங்களின் விருப்பமாக இருப்பவர், பேரண்டத்தைப் படைத்தவர், சுடரொளி வீசும் ஒளிவட்டமாய் திகழ்பவர். ஓம் எனும் மந்திரத்தின் ஆலயம் நீங்கள்; பக்தர்களின் பாடல்களை விரும்புபவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

துரகவாகனம் சுந்தரானனம்

வரகதாயுதம் தேவவர்ணிதம்

குருகிருபாகரம் கீர்த்தனப்பிரியம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

குதிரையை வாகனமாகக் கொண்டவரே, அழகிய திருஉருவம் கொண்டுள்ளவரே, ஆசிர்வதிக்கப்பட்ட தண்டாயுதத்தை ஏந்துபவர், ஒய்யாரமானவர்; என்னுடைய குரு நீங்கள். பக்தர்களின் பாடல்களை விரும்புபவரே, அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

திரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்

திரிநயன பிரபும் திவ்யதேசிகம்

திரிதசப்பூஜிதம் சிந்திதப்பிரதம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

மூவுலகாலும் வணங்கப்படுபவர், கடவுளர்களின் ஆன்மாவாகத் திகழ்பவர், சிவனின் உருவமாக இருப்பவர், தேவர்களால் வணங்கப்படுபவர்; உங்களைத் தினந்தோறும் மூன்றுமுறை வணங்குகிறோம். எங்கள் மனம் நிறைந்தவர் நீங்கள்;

அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

பவபயாபகம் பாவுகாவகம்

புவனமோகனம் பூதிபூசணம்

தவளவாகனம் திவ்யவாரணம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

அச்சத்தை அழிப்பவர், செழிப்பை கொணர்பவர், இந்த அண்டத்தை ஆள்பவர், திருநீற்றை ஆபரணமாக அணிந்தவர். வெள்ளை யானையை வாகனமாக கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

களம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்

களபகோமளம் காத்ரமோகனம்

களபகேசரி வாஜிவாகனம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

இனிமையான, மிருதுவான புன்முறுவல் உடையவரே, அழகிய திருமுகத்தை உடையவரே, இளமையும், மென்மையும் உடையவர். சொக்க வைக்கும் பேரழகையும், யானை, சிங்கம், குதிரை போன்றவற்றை வாகனமாகவும் கொண்டவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரிதம்

ச்ருதிவிபூஷணம் சாதுஜீவனம்

ச்ருதிமனோகரம் கீதலாலசம்

ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

பக்தர்களால் நேசிக்கப்படுபவர், பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்பவர், வேதங்களால் துதிக்கப்படுபவர், ஞானியரை ஆசிர்வதிப்பவர். வேதங்களின் சாராம்சம் நீங்கள்; தெய்வீக இசையை ரசிப்பவர் நீங்கள். அரி மற்றும் அரனின் புதல்வரே, உங்களைச் சரணடைந்தோம்.

(harivarasanam song meaning tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal, Ayyappan Tamil Song Lyrics. You can also save this post ஹரிவராசனம் பாடல் விளக்கம் or bookmark it. Share it with your friends…

Share

Recent Posts

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் | soundarya lahari tamil

இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…

4 weeks ago

ஆதித்ய ஹ்ருதயம் – 11-15 | aditya hrudayam stotram 11 15

இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

4 weeks ago

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா | onnam thiruppadi saranam pon ayyappa

இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…

2 months ago

கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம் | kotti muzhakkiduvom pambai

இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…

2 months ago

விநாயகனே வினை தீர்ப்பவனே | vinayagane vinai theerpavane

இந்த ஆன்மீக பதிவில் (விநாயகனே வினை தீர்ப்பவனே) - விநாயகனே வினை தீர்ப்பவனே பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை படித்து…

2 months ago

கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல் | ganesha saranam saranam ganesha bhajanai

இந்த ஆன்மீக பதிவில் (கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை பாடல்) -  கணேஷ சரணம் சரணம் கணேஷா பஜனை…

2 months ago