இந்த ஆன்மீக பதிவில் (கார்த்திகை பிறந்தது உனக்காக) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கார்த்திகை பிறந்தது உனக்காக ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண – வீரமணிதாசன் பாடிய ஐயப்பன் பாடல் வரிகள். Kaarthigai Piranthathu Unakkaka – Song on Lord Ayyappa by Veermanidasan from Album Irumudi – songs Tamil Lyrics

============

கார்த்திகை பிறந்தது உனக்காக

நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண

கார்த்திகை பிறந்தது உனக்காக

நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2)

மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து

வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என்

இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது)

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

பூமரத்து நிழல் பார்த்து

ஓய்வாக நான் சாய்ந்தேன்

அட்டா அதுவோ இலையுதிர் காலம்

வானத்து குடை கீழே

பசும்புல்லின் பாய் மேலே

படுத்தேன் அதுவோ

அடை மழைக் காலம்

துரும்பானேன் புயல்காலம்

துளிர்விட்டேன் வெயில்காலம்

இறைவா உன் துணை வேண்டும்

கைகூடும் கார்காலம்

இருமுடி சுமந்து நடந்திடுவேன்

பெருவழிப் பாதை கடந்திடுவேன்

பரம்பொருள் உன்னை நாடிடுவேன்

வரும் துயர் யாவும் தீர்த்திடுவேன் (கார்த்திகை பிறந்தது)

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

இல்லாத வறியோர்க்கு பொருள் அள்ளித்தருகின்ற

நல்லோர் வாழ்ந்தது கரிகாலம்

இருக்கின்ற உயிருக்கு விலை பேசித் திரிகின்ற

வஞ்சகர் நடைபோடும் கலிகாலம்

பணமிருந்தால் நிகழ்காலம்

பகை வந்தால் போர்க்காலம்

ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்

பணமிருந்தால் நிகழ்காலம்

பகை வந்தால் போர்க்காலம்

ஐயா உன் அருளிருந்தால் ஒளிவீசும் எதிகாலம்

சரணம் சொல்லி பாடிடுவேன்

சபரிமலைதனில் ஏறிடுவேன்

பதினெட்டு படியில் தவம் கிடப்பேன்

தரிசனம் கண்டே திரும்பிடுவேன் (கார்த்திகை பிறந்தது)

Kaarthigai Piranthathu Unakkaka Ayyappa song lyrics in Tamil : The above lyrics – Kaarthigai Piranthathu Unakkaka song on Lord Ayyappa by Veermanidasan from Album Irumudi. Tamil Devotional Ayyappan Song Video Sung and Performed by Veeramanidaasan from the Album Irumudi produced by Unique Recording.

(kaarthigai piranthathu unakkaka) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Veeramanidaasan Ayyappan Songs. You can also save this post கார்த்திகை பிறந்தது உனக்காக or bookmark it. Share it with your friends…

Leave a Comment