இந்த ஆன்மீக பதிவில் (காளிகாம்பாள் 108 போற்றிகள்) – Kalikambal 108 potri பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… காளிகாம்பாள் 108 போற்றிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Kalikambal 108 potri

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அரசிளங் குமரியே போற்றி

ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி

ஓம் அமுத நாயகியே போற்றி

ஓம் அருந்தவ நாயகியே போற்றி

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி

ஓம் இளவஞ்சிக்கொடியே போற்றி

ஓம் இமயத்தரசியே போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈஸ்வரியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண் திசையும் வென்றாய் போற்றி

ஓம் ஏகன் துணையே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கனகமணிக்குன்றே போற்றி

ஓம் கற்பின் சுந்தரியே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி

ஓம் கல்விக்கு வித்தே போற்றி

ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச்சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

ஓம் காட்சிக்கினியாய் போற்றி

ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி

ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி

ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி

ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

ஓம் கூடர்கலாப மயிலே போற்றி

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சம்பந்தன் ஞான தாயே போற்றி

ஓம் ஷக்தி வடிவே போற்றி

ஓம் சங்கம் வளர்தோய் போற்றி

ஓம் சிவாகம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி

ஓம் சிவானந்த வல்லியே போற்றி

ஓம் சிங்கார வல்லியே போற்றி

ஓம் செந்தமிழ் தாயே போற்றி

ஓம் செல்வத்துக்குக் கரசியே போற்றி

ஓம் சேனைத் தலைவியே போற்றி

ஓம் சொக்கர் நாயகியே போற்றி

ஓம் சைவநெறி நிலைக்கச்செய்தாய் போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞான பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர் குலைச்சுடரே போற்றி

ஓம் திருவுடையம்மையே போற்றி

ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி

ஓம் திரிபுர சுந்தரியே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி

ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி

ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் தென்னவன் செல்வியே போற்றி

ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி

ஓம் நற்கனியின் சுவையே போற்றி

ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

ஓம் நல்ல நாயகியே போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நீதிக்கரசியே போற்றி

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

ஓம் பழமறையின் குருந்தே போற்றி

ஓம் பரமானந்த பெருக்கே போற்றி

ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய் கிளியே போற்றி

ஓம் பசுபதி நாயகியே போற்றி

ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி

ஓம் பாண்டிமா தேவியின் தேவி போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பெரிய நாயகியே போற்றி

ஓம் பொன்மயிலம்மையே போற்றி

ஓம் பொற்க்கொடி அம்மையே போற்றி

ஓம் மங்கல நாயகியே போற்றி

ஓம் மழலைக் கிளியே போற்றி

ஓம் மனோன்மணித்தாயே போற்றி

ஓம் மண் சுமத்தோன் மாணிக்கமே போற்றி

ஓம் மாயோன் தங்கையே போற்றி

ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

ஓம் மீனாட்சியம்மையே போற்றி

ஓம் முழு ஞானப்பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி

ஓம் வடிவழகம்மையே போற்றி

ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

ஓம் வேத நாயகியே போற்றி

ஓம் சௌந்தராம்பிகையே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

ஓம் அம்மையே அம்பிகையே போற்றி

ஸ்ரீ காமாட்சி அம்மையே போற்றி

ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி

ஸ்ரீ காளிகாம்பாள் அம்மையே போற்றி போற்றி!

============

ஆத்யா காளி ஸ்தோத்ரம்

ஆத்யா காளி ஸ்தோத்ரம்
மிகவும் விசேஷமானதாக பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. தேவர்களுக்கு பிரச்னைகள் வரும் பொழுதெல்லாம், அதிலிருந்து விடுபட அவர்கள் ஆத்யா காளி தேவி ஸ்தோத்ரத்தை துதித்து அன்னையின் அருளால் மீண்டதாக சொல்லப்பட்டுள்ளது. அன்னை ஆத்யா காளி மகத்தான சக்தி பெற்றவள். அவள் அருள் அனைத்து பகைகளையும் அழித்து வாழ்வில் முழுமையை கொடுக்கக்கூடியது. ஆத்யா காளி ஸ்தோத்ர பாராயணம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று ரிஷி விஸ்வாமித்ரர் கூறுகிறார்.

(kalikambal 108 potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Bhadrakali Songs and Mantras, காளிகாம்பாள் பாடல்கள். You can also save this post காளிகாம்பாள் 108 போற்றிகள் or bookmark it. Share it with your friends…

Leave a Comment