இந்த ஆன்மீக பதிவில் (கந்தன் காலடியை வணங்கினால்) –  கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கந்தன் காலடியை வணங்கினால் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள்.Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kandhan Karunai fim song lyrics – Lord Murugan Devotional songs Tamil Lyrics. Movie | Thiruvarul | Sung By T.M.Soundararajan | Music | Kunnakudi Vaidhyanathan

============

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்

தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்

சிவசக்தி தானே வேலன்

அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்

மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை)

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி

அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே

அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்

கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்

வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் (கந்தன் காலடியை)

(kandhan kaladiyai vananginal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post கந்தன் காலடியை வணங்கினால் or bookmark it. Share it with your friends…

Leave a Comment