இந்த ஆன்மீக பதிவில் (கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை பாடல் வரிகள். Kanivoedu namai izhukum kaanthamalai K.J.Yesudhas Ayyappa song Tamil Lyrics

கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை

மணிகண்டன் வாழும் உயர்ந்தமலை சபரிமலை (கனிவோடு)

ஓங்கார நாதமெனும் வேதமலை – அன்பர்

ஒற்றுமையாய் நாமம் சொல்லும் தெய்வமலை (கனிவோடு)

தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர

தெய்வமகன் பவனி வந்த சபரிமலை

தேவேந்திரன் புலியாக தேவர்களும் கூடவர

தெய்வ மகன் பவனி வந்த சபரிமலை

கண்ணில்லார்க்கு கண் கொடுக்கும் சாந்திமலை

பேசாத பிள்ளைகளை பேசவைக்கும் தெய்வமலை (கனிவோடு)

காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக

பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட

காத்திருந்தாள் பக்தசபரி கானகத்தில் ஆவலாக

பொன்மாமலை ஹரிஹரசுதன் தனக்கு மோட்சம் நல்கிட

ஜோதியாகி சபரி மோட்சம் தந்த தெய்வம்

சொன்னான் தான் வாழும் புனிதத்தலம் சபரிமலை ( கனிவோடு)

‘பத்மஸ்ரீ’ கே. ஜே. ஜேசுதாஸ் பாடிய‌ ‘கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை’ ஐயப்பன் பாடலின் வரிகள்.

(kanivoedu namai izhukum) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post கனிவோடு நமை இழுக்கும் காந்தமலை or bookmark it. Share it with your friends…

Leave a Comment