இந்த ஆன்மீக பதிவில் (கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை மணிகண்டன் வாழும் மலை -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Kannimalai Ponnu Malai punyamalai Manikandan vazhum malai – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா

ஐயனே…. ஐ…. சரணம் ஐயப்பா

மாலையும் மார்பிலிட்டு நோன்புகள் நோற்று நாங்கள்

மாமலைகள் ண்டிவருவோம் ஐயனைக் காண்போம்

============

கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை

கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை

மணிகண்டன் வாழும் மலை – பக்தர்

பல நாடு விட்டிங்கே பல கோடியாய் சேர்ந்து

சரணம் முழங்கும் மலை – சுவாமி சரணம் முழங்கும்மலை

என் ஐயா பொன் ஐயா என் ஐயா ஐயப்பனே

சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)

கௌரீசன் தன்மகனாம்

கலிகால தெய்வமவன்

பம்பா நதிக்கரையில் பிறந்தானே ஐயன் ஐயன்

வேட்டையாடும் மன்னனவன் காட்டினிலே சென்ற நேரம்

கண்டெடுத்து ஐயனை வளர்த்தானே

என் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே

சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னி)

வில்லாளி வீரனாகி வீரமணிகண்டனாகி

புலிவாகனனாகி சுவாமி மகிஷிமர்த்தனனாகி

ஏழுமலை தாண்டி ஐயன் சபரிமலை மேலமர்ந்தான்

நாம் அவனை போற்றி நலம் பெறுவோம்

என் ஐயா பொன்ஐயா என் ஐயா ஐயப்பனே

சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)

கன்னிகட்டு நிறைவு செய்தவர்

கரிமலை நீலிமலை கடந்து வருபவர்

பதினெட்டாம் படி ஏறி வருபவர்

சரணம் முழங்கி ஆடிப்பாடி வருபவர்

மோட்சம் பெற முக்தி பெற பாட்டுப்பாடி

துள்ளி ஆடும் சாமி பக்தருக்குள் புரிவான்

என்ஐயா பொன்ஐயா என்ஐயா ஐயப்பனே

சரணம் சரணம் சரணம் சாமியே (கன்னிமலை)

(kannimalai ponnu malai punyamalai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள். You can also save this post கன்னிமலை பொன்மலை புண்யமலை சபரிமலை or bookmark it. Share it with your friends…

Leave a Comment