மகா சிவராத்திரி சிறப்பு

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.

ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு

மகா சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு

மகா சிவராத்திரிக்கு தேவையான  பூஜை பொருட்கள்

  1. பால், சந்தனம், விபூதி, பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், வெட்டி வேர், வில்வ இலை அபிஷேகத்திற்கு முக்கிய பொருட்கள்.

2. கண்டிப்பாக அபிஷேகத்திற்கு வில்வ இலை பயன்படுத்துவது அவசியம்.

3. சிவ லிங்கத்தை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்து அபிஷேகம் செய்யவும்.
4.  சிவ லிங்கம் மேல் முழுவதும் வில்வ இலையைப் போட்டு அர்ச்சித்து,                     நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிய படியே அபிஷேகம் செய்ய வேண்டும்.
5. அதன் பின்னர் சிவ லிங்கத்தை எடுத்து வைத்து அலங்காரம் செய்யுங்கள்.

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
அபிஷேகம் – பஞ்சகவ்யம்
அலங்காரம் – வில்வம்
அர்ச்சனை – தாமரை, அலரி
நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் – வில்வம்
பட்டு – செம்பட்டு
தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி- புட்பதீபம்

=========================================

இரண்டாம் யாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
அலங்காரம் – குருந்தை
அர்ச்சனை – துளசி
நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் – பலா
பட்டு – மஞ்சள் பட்டு
தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் – அகில், சந்தனம்
புகை – சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திரதீபம்

===========================================

மூன்றாம் யாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
அபிஷேகம் – தேன், பாலோதகம்
அலங்காரம் – கிளுவை, விளா
அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் – எள்அன்னம்
பழம் – மாதுளம்
பட்டு – வெண் பட்டு
தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை – மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐதுமுக தீபம்

============================================

நான்காம் யாமம்

வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் – கரு நொச்சி
அர்ச்சனை – நந்தியாவட்டை
நிவேதனம் – வெண்சாதம்
பழம் – நானாவித பழங்கள்
பட்டு – நீலப் பட்டு
தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
புகை – கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி- மூன்று முக தீபம்

Leave a Comment