Categories: Devotional Songs

மாசாணியம்மன் 108 போற்றி | masani amman 108 potri

இந்த ஆன்மீக பதிவில் (மாசாணியம்மன் 108 போற்றி) – Masani Amman 108 Potri in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மாசாணியம்மன் 108 போற்றி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

Masani Amman 108 Potri in Tamil

1. ஓம் அன்பின் உருவே போற்றி

2. ஓம் அருளின் பொருளே போற்றி

3. ஓம் அகிலம் ஆள்பவளே போற்றி

4. ஓம் அக்கினி ரூபமே போற்றி

5. ஓம் அன்னை மாசாணியே போற்றி

6. ஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி

7. ஓம் ஆசாரக காவலே போற்றி

8. ஓம் ஆனந்தத் திருவே போற்றி

9. ஓம் அமாவாசை நாயகியே போற்றி

10. ஓம் அலங்காரி சிங்காரி போற்றி

11. ஓம் ஆங்காரி மாசாணியே போற்றி

12. ஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி

13. ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி

14. ஓம் ஆதரவு தருவாய் போற்றி

15. ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

16. ஓம் ஆக்ஞான சக்தியே போற்றி

17. ஓம் ஆகாய ரூபமே போற்றி

18. ஓம் ஆதிபகவதியே போற்றி

19. ஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி

20. ஓம் இகம்பர சுகம் தருவாய் போற்றி

21. ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி

22. ஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி

23. ஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி

24. ஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி

25. ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி

26. ஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி

27. ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி

28. ஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி

29. ஓம் இசைக்குள் இசையானாய் போற்றி

30. ஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே போற்றி

31. ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

32. ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

33. ஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி

34. ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி

35. ஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி

36. ஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி

37. ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி

38. ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி

39. ஓம் உடுக்கையை சுமந்தவளே போற்றி

40. ஓம் உண்மைப் பொருளே போற்றி

41. ஓம் உத்தமித் தெய்வமே போற்றி

42. ஓம் உள்ளும் புறமும் ஆனாய் போற்றி

43. ஓம் உயிரே போற்றி உணர்வே போற்றி

44. ஓம் உக்கிரப் பாவை உடையவளே போற்றி

45. ஓம் உள்ளத்தை விளக்காய் மாற்றினேன் போற்றி

46. ஓம் உயிரைத் திரியாய் ஆக்கினேன் போற்றி

47. ஓம் உதிரத்தை நெய்யாய் ஊற்றினேன் போற்றி

48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

49. ஓம் ஊக்கம் அளித்துக் காப்பாய் போற்றி

50. ஓம் ஊழியம் உனக்கே செய்தேன் போற்றி

51. ஓம் ஊர்க்காவலே மாசாணியே போற்றி

52. ஓம் எளியோரும், வலியோரும் வணங்குவார் போற்றி

53. ஓம் எந்தை அடியே போற்றி

54. ஓம் எங்கும் நிறைவாய் போற்றி

55. ஓம் எட்டுத்திக்கும் ஆட்சி செய்வாய் போற்றி

56. ஓம் என்றும் துணையாய் இருப்பாய் போற்றி

57. ஓம் எழில் உருவே போற்றி

58. ஓம் எண்ணத்தில் உறைபவளே போற்றி

59. ஓம் என் அறிவுக்கு எட்டாத தத்துவமே போற்றி

60. ஓம் எண்ணை காப்பு பிரியாளே போற்றி

61. ஓம் என் குறை தவிர்ப்பாய் போற்றி

62. ஓம் எலுமிச்சை மாலை ஏற்பாய் போற்றி

63. ஓம் எங்கள் தெய்வமே மாசாணி போற்றி

64. ஓம் ஏக்கம் போக்குவாய் போற்றி

65. ஓம் ஏற்றங்கள் தருவாய் போற்றி

66. ஓம் ஏகப் பரம்பெருள் சக்தியே போற்றி

67. ஓம் ஏழைக்கு இரங்குவாய் போற்றி

68. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

69. ஓம் எமனை அழித்தாய் போற்றி

70. ஓம் ஏமத்தில் சாமத்தில் நீயே துணை போற்றி

71. ஓம் ஏவல், சூனியம் எடுப்பவளே போற்றி

72. ஓம் ஐயம் தவிர்ப்பாய் போற்றி

73. ஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் போற்றி

74. ஓம் ஐம்பொற் சிலையே போற்றி

75. ஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி

76. ஓம் ஐந்து உலகம் ஆள்வாய் போற்றி

77. ஓம் ஒளிர்பவளே போற்றி

78. ஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி

79. ஓம் ஒப்பிலா மணியே போற்றி

80. ஓம் ஒருபொருள் தத்துவமே போற்றி

81. ஓம் ஓங்காரப் பொருளே போற்றி

82. ஓம் ஓதுவார் உள்ளத்து உறைபவள் போற்றி

83. ஓம் சக்தி தாயே போற்றி

84. ஓம் ஓமெனும் உட்கருவே போற்றி

85. ஓம் நீதியின் உருவே போற்றி

86. ஓம் நிம்மதி தருவாய் போற்றி

87. ஓம் மலை வடிவானவளே போற்றி

88. ஓம் சிலை வடிவானவளே போற்றி

89. ஓம் மங்களம் அருள்வாய் போற்றி

90. ஓம் பூக்குழி நாயகியே போற்றி

91. ஓம் மயான நாயகியே போற்றி

92. ஓம் மன அமைதி தருவாய் போற்றி

93. ஓம் குங்குமக்காரியே போற்றி

94. ஓம் மனுநீதித் தராசே போற்றி

95. ஓம் மாற்றங்கள் மகிழ்வுடன் தருவாய் போற்றி

96. ஓம் மண்ணின் மணியே மந்திரமே போற்றி

97. ஓம் மசக்கையோடு இருந்தவளே போற்றி

98. ஓம் மாங்கனி உண்ட மங்கையே போற்றி

99. ஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி

100. ஓம் எல்லாப் பிணிகளையும் போக்குவாய் போற்றி

101. ஓம் மயானக் கொள்ளை பிரியாளே போற்றி

102. ஓம் தாரகனின் மகள் தரணியே போற்றி

103. ஓம் தரணியை ஆள தவமிருந்தோய் போற்றி

104. ஓம் நந்தவன நாயகியே மாசாணி போற்றி

105. ஓம் மகப்பேறு உபாதைகள் போக்குவாய் போற்றி

106. ஓம் சக்தியான சங்கரியே போற்றி

107. ஓம் சந்ததிகளை காக்க சடுதியிலே வருவாய் போற்றி

108. ஓம் அம்மா அழகே மாசாணியே போற்றி

பண்டைய காலங்களில், ஆனைமலை நன்னூர் என்றும், இப்பகுதி நன்னூரால் ஆளப்பட்டது. தனக்குச் சொந்தமான அடர்த்தியான மாந்தோப்பில் இருந்து பழங்களை பறித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அவர் அறிவித்திருந்தார். ஒரு நாள், ஒரு பெண் இந்தக் தண்டனைகளைப் பற்றி அறியாமல் ஒரு பழத்தை உட்கொண்டதால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அநீதியால் அவள் கொல்லப்பட்டதை அடுத்து அவளது ஊர்க்காரர்கள் அவளுக்கு கோவில் எழுப்பி குலதெய்வமாக வழிபட்டனர். மாசாணியம்மன் காளி தேவியின் அம்சம் எனவும் சொல்லப்படுகிறது.

செய்யும் தொழில் விருத்தி அடைய, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க, கண்ணேறுகள் நீங்க, பகைமை ஒழிய, கிடைக்க வேண்டிய நியாயமான பங்கு, சொத்து, தொகைகள் கொடுத்தது கிடைக்க பிள்ளைகள் வாழ்வில் வளம் பெற வேண்டுவோம்…

வாழ்க வளமுடன் !!! நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

============

மாசாணியம்மன் கோவில்

சக்தியினால் தான் இந்த உலகம் இயங்குகிறது. கொற்றவை வழிபாடு, கண்ணகி வழிபாடு, மாரியம்மன் வழிபாடு என்பதெல்லாம் தமிழர் கண்ட சக்தி வழிபாட்டு நெறிகளாகும். காவல் தெய்வமாக, வன தேவதையாக, மக்கள் வழிபடும் தெய்வமாக அன்னை சக்தியின் ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அதுபோல‌ காவல்தெய்வமே மாசாணியம்மன். இந்த சிறப்புமிக்க அம்மனின் திருத்தலம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கில் 15 கி.மீ தொலைவில் ஆனைமலையில் சேத்துமடை சாலையில் நுழைவு வாயில் கொண்டு, உப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

எல்லா கோயில்களிலும் அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியின் தோற்றம் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் உள்ளாள். இது வேறு எங்கும் காண கிடைக்காத காட்சியாகும். பெண்களின் தீராத வயிற்றுவலி, மாதாந்திர துன்பங்கள் நீங்க உதிர மாலை வாங்கி அம்மனுக்கு சாத்தினால் நோய்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

(masani amman 108 potri) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, 108 போற்றிகள். You can also save this post மாசாணியம்மன் 108 போற்றி or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

Adangaatha Asuran Song Lyrics | அடங்காத அசுரன் பாடல் வரிகள் | Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago

Adangaatha Asuran Song Lyrics from Raayan

Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…

5 months ago

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

9 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

9 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

10 months ago