பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில் உள்ளது… ஒவ்வொரு முருகர் பக்தரும் இந்த பாடலை பாடி முருகர் அருளை பெறுவோம்… மற்றொரு சிறப்பு இந்த பாடலுக்கு உண்டு… அது என்னவென்றால், ஒவ்வொரு ஐயப்பா பூஜையிலும் இந்த பாடல் பக்தர்களால் பாடப்படும்…
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே (பச்சை)
கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா (பச்சை)
நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
சேவல் கொடி மயில் வீரா (பச்சை)
வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா (பச்சை)
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
எங்கும் நிறைந்தவனே (பச்சை)
அலைகடல் ஓரத்திலே – என்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
பச்சை மயில் வாகனனே – சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே (பச்சை)
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…
இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…