இந்த ஆன்மீக பதிவில் (பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Panthalathu Rajanukku Paatedupom Vaanka – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

சாமியே சரணம் ஐயப்போ சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ……….

============

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

(குழு : சத்குரு நாதனே சரணம் ஐயப்போ)

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ (2)

வாவர் தோழன‌ வணங்கிட‌ வேண்டியே

பந்தள‌ இராசன‌ பாத்திட‌ வேண்டியே

கால‌ அதிகால‌ நல்ல‌ கார்த்திகையில் நாங்களே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

வெள்ளி முளைக்கும் வேளையில‌ கண் முழிச்சோம் சாமி

வள்ளியோட‌ கொளுந்தனார‌ வணங்கிபுட்டோம் சாமி (2)

வெட‌ வெட‌ குளிரில‌ குளிச்சது தெரியல‌

நாப்பது நாளுமே நகந்தது தெரியல‌

போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌

மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

திம்தகத்தோம் திம்தகத்தோம் திம்தகத்தோம் தோம் தோம்

ஆயுசு காலம் மட்டும் மாமலைக்குப் போவோம்

அம்பலத்தான் பெருமையத்தான் பூமி எங்கும் சேர்ப்போம் (2)

இருமுடி தாங்கியே ஒரு மனதாகியே

திருமல‌ ஏறியே திருவருள் வாங்கவே

போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌

நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)

(panthalathu rajanukku paattedupom) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs. You can also save this post பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌ or bookmark it. Share it with your friends…

Leave a Comment