இந்த ஆன்மீக பதிவில் (ராகு கால‌ துர்கா ஸ்தோத்ரம்) – Rahu Kala Durga Stotram Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ராகு கால‌ துர்கா ஸ்தோத்ரம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

இராகு கால‌ துர்கா ஸ்தோத்ரம் | Vazhvu anaval durga song Lyrics

வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்

அம்மையானவள் அன்பு தந்தையானவள்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்

அம்மையானவள் அன்பு தந்தையானவள்

இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்

மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

உயிருமானவள் துர்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமையானவள்

உயிருமானவள் துர்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமையானவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையுமானவள் இன்ப தோணியானவள்

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையுமானவள் இன்ப தோணியானவள்

அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்

குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்

குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவுமானவள் துர்கா திரிசூலி மாயவள்

திருவுமானவள் துர்கா திரிசூலி மாயவள்

திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்

ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே

கருணை துர்கையே வீர சகன துர்கையே

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே

கருணை துர்கையே வீர சகன துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே ஜெய துர்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

*அம்பிகையின் திருவடிகளில் சரணம் !*

============

வாழ்வு ஆனவள் துர்கா பாடல்

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் இராகுகால‌ துர்கா பாடல் வரிகள். Vaalvu aanaval durga vaakum aanaval Tamil Lyrics

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் (Vaazhvu aanaval Durga – Rahu kala durga stotram / durga ashtakam) ஸ்ரீ துர்கை அம்மனை இராகு கால‌ வேளைதனில் வழிபட உகந்த‌தாகும். இந்த பாடலை ராகு கால துர்கா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள. ராகு கால வேளையில் அன்னை துர்கையை வழிபட‌, துர்கை அம்மன் அருளை பெற‌ இந்த பாடலை பாடுவது மிக சிறப்பாகும்.

============

இராகு கால‌ துர்கா ஸ்தோத்திரம் பலன்

ராகு காலத்தில் துர்கை அம்மன் முன் நெய் விளக்கேற்றி பாட வேண்டிய ஸ்தோத்திரம் இது. இதனால் திருமணத்தடை நீங்குதல், சத்ரு தோஷம், மாங்கல்ய பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை

(rahu kala durga stotram tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Durga Devi Songs, துர்கா தேவி பாடல்கள், p susheela jaya jaya devi, பி சுசீலா பக்தி பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics, Stotram. You can also save this post ராகு கால‌ துர்கா ஸ்தோத்ரம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment