இந்த ஆன்மீக பதிவில் (சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது பாடல் வரிகள். Sabarimalaiyile swami maarkalin sanjalam ellam vilakuthu- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

சாமி ! வீடியோ பாருங்க‌

சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே…. ஐ சரணம் ஐயப்பா

சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா

சபரிமலையிலே சுவாமி மார்களின்

சஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌

சாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம்

கோடிக் கோடியாய் வருகுது

ஆயிரம் கோடு சூரியன் போலே

ஐயப்பன் முகம் ஜொலிக்குது

அருகில் சென்று மனமுருகிப் பாடி

அவன் பதமலர் தனையே தேடுது

(சபரிமலையிலே )

கோவில் மணியோசை கேட்டதுமே

நம் கவலையெல்லாம் பறக்குது

கோமகன் அழகை காண‌ மனம்

எண்ணி எண்ணி துடிக்குது

பாலபிஷேகம் கண்டபின்னே நம்

பாவங்களெல்லாம் கரையுது

பணிந்து அவனின் புகழ் பாடப்பாட‌

நம் உள்ளமெல்லாம் உருகுது

(சபரிமலையிலே )

காடுமலையிலே நடந்திடும் போது

ஐயன் சரண‌ ஒலி கேட்குது

சாமியே ஐயப்போ

சாமி சரணம் ஐயப்பா சரணம்

காடுமலையிலே நடந்திடும் போது ஐயன்

சரண‌ ஒலி கேட்குது அந்த‌

ஐயனின் சரணம் கேட்டதுமே அங்கு

யானைகளெல்லாம் விலகுது

கற்பூர‌ ஒளியிலே ஐயனின் தரிசனம்

காந்தம் போலே இழுக்குது

காருண்ய‌ மூர்த்தியின் தவக்கோலம்

கண்டால் மனமே சிலிர்க்குது

(சபரிமலையிலே )

சரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா

(sabarimalaiyile swami maarkalin sanjalam ellam vilakuthu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், ஐயப்பன் குத்து பாட்டு, வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post சபரிமலையிலே சுவாமி மார்களின் சஞ்சலம் எல்லாம் விலகுது or bookmark it. Share it with your friends…

Leave a Comment