இந்த ஆன்மீக பதிவில் (சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை!) – Saivam Vainavam Ontru thirandu thavam puriyum sabarimalai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! – ஐயப்பன் பாடல் வரிகள். Saivam Vainavam Ontru thirandu thavam puriyum sabarimalai – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சைவம் வைணவம் ஒன்று திரண்டு

தவம் புரியும் இடம் சபரிமலை!

தவறி விழுந்த மனிதனை எல்லாம்

தழுவிக் கொள்வது சபரிமலை!

ஐயன் இருப்பது சபரிமலை!

ஹரிஹரசுதன் ஆளும் மலை

அழகிய கால்களில் முத்திரை இட்டு

அருள் தர நினைப்பது சபரிமலை!

மானிடர் தமக்கு ஓர் இடர் வந்தால்

ஓடிப் போவது சபரிமலை!

மருத்துவ முறையில் பக்தியை இன்று

திருத்தி அமைத்தது சபரிமலை!

மதங்கள் ஜாதிகள் சங்கமமாகி

மனிதனை கண்டது சபரிமலை!

அரண் அருள் தேடி முனிவர் நடந்தது

பனிமயமான இமயமலை!

மகன் அருள்தேடி மனிதர் நடப்பது

ஒளிமயமான சபரிமலை!

சென்றவர்க்கெல்லாம் ஐயன் இருந்து

திருவருள் தருவது சபரிமலை!

சென்றவர் தம்மை கண்டவருக்கும்

திருவருள் தருவது ஐயன் மலை!

ஐயன் மலை ஐயப்பன் மலை

கரிமலைநாதன் கலியுகவரதன் மலை!

பூமித் தலைவன் பூத நாதன் மலை

மனத்துயர் துடைக்கும் மணிகண்டன் மலை!

கானகவாசன் வாழும் மலை

ஐயன் மலை ஐயப்பசாமி மலை!

எங்கும் நிறைந்தவன் ஐயப்பன்!

எங்கள் நாயகன் ஐயப்பன்!

ஐயப்ப சரணம் சாமி சரணம்!

சாமி சரணம் ஐயன் சரணம்!

ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!!

ஓம் சரணம் சரணம் சாமியே சரணம்!!

(saivam vainavam ontru) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post சைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை! or bookmark it. Share it with your friends…

Leave a Comment