இந்த ஆன்மீக பதிவில் (சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Saranam Saraname Saranam Ponn ayyappa – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

ஆனந்த‌ தாண்டவ‌ நாராஜன் ஆனந்த‌

முகில் வண்ணன் நாராயணன்

ஆவலுடன் ஈன்றெடுத்த‌ அழகு மைந்தன்

தேவர்கள் மகிழும் வண்ணம்

தேன்மலை சபரியிலே கோயில் கொண்டவன்

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா என்ற‌

திவ்ய‌ நாமத்தைச் சொன்னவர்க்கே

தர்ம‌ சாஸ்தாவின் அருள் உண்டு திண்ணமாக‌

எண்ணமெல்லாம் ஐயன் மேல் வைத்து அந்தக்

கண்ணன் மகனின் ஆலயத்தை வலம் வந்தவர்க்கே

சர்வ‌ மங்கள‌ உண்டாகும் சத்தியமான‌

பொன்னு பதினெட்டுபடி மேல் ஏறி

ஐயன் தரிசனத்தைக் காணச் செல்லுவோம்

சுவாமி மாரே ஐயப்பன் மாரே

சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா

ஐயப்பா சரணம் சரணம் பொன்னைய்யப்பா

சரணம் சரணம் என்று சொல்லிப்பாடுவோம்

சபரிமலையிலே ஒன்று கூடுவோம்

கார்த்திகையில் மாலைதனைப் போட்டுக் கொள்ளுவோம்

மார்கழியில் அவன் புகழ் பாடி மகிழ்வோம் (சரணம் சரணமே)

பள்ளிக்கட்டைக் கட்டிக்கொண்டு யாத்திரை செல்ல‌

கல்லும் முள்ளும் மெத்தையென்று பாதங்கள் செல்ல‌

கோட்டை எரிமேலிதன்னில் பேட்டையும் துள்ள‌

நாம் ஆடிப்பாடி செல்வோம் ஐயன் புகழ் மணக்க‌ (சரணம் சரணமே)

காடுவழி போகும்போது கடுவாய் கரடி புலி

யானையைக் கண்டு அஞ்சாத‌ பேர்களுமுண்டோ

சமயத்தில் வந்து காக்க‌ மணிகண்டன் துணையுண்டு

சாஸ்தாவை நம்பி நாம் நடை கட்டுவோம் அந்த‌

சாஸ்தாவை நம்பி நாம் நடைகட்டுவோம் (சரணம் சரணமே)

பொன்னாபரண‌ மணிந்த‌ பொன்னம்பல‌ வாசனவன்

கற்பூரதீபமும் கண்டு மகிழ்ந்திடுவோம்

ஜோதியைக் கண்டவுடனே நாமெல்லோரும்

ஒன்று சேர்ந்து கூட்டுச் சரண‌ கோஷமும் போட்டு மகிழ்வோம் (சரணம் சரணமே)

கே. வீரமணி பாடிய‌ ‘சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா’ ஐயப்பன் பாடலின் வரிகள். கே. வீரமணி ஐயப்பன் பாடல்கள்.

(saranam saranamey saranam ponn ayyappa veeramani) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள், பாடல் வரிகள். You can also save this post சரணம் சரணமே சரணம் பொன்னைய்யப்பா or bookmark it. Share it with your friends…

Leave a Comment