இந்த ஆன்மீக பதிவில் (சரவணபவனே சண்முக வடிவே) – Saravana bhavane Shunmuga vadive பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… சரவணபவனே சண்முக வடிவே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
சரவணபவனே சண்முக வடிவே சரணடைந்தோமே வேல் முருகா முத்தான முருகன் பாடல் . Saravana bhavane Shunmuga vadive – Murugan Devotional Song lyrics.
சரவணபவனே சண்முக வடிவே
சரணடைந்தோமே வேல் முருகா
கரங்கள் குவித்து உன்னடி பணிய
காத்திடுவாயே வேல் முருகா
நிரந்தரமான உனதருள் வேண்டி
நினைப்போம் உன்னை வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
நறுமலர் எடுத்து சரமாய் தொடுத்து
நான் உனக்களிப்பேன் வேல் முருகா
தருணம் இதுவென தந்திடுவாய் அருள்
தாமதம் ஏனோ வேல் முருகா
கருணை புரியும் கந்தா என் மேல்
கடைக்கண் வைப்பாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பழனி மலையில் நின்றருள் செய்யும்
பாலகன் நீயே வேல் முருகா
பஞ்சாமிர்தமாய் இனிப்பவன் நீயே
பக்தருக்கென்றும் வேல் முருகா
கோவண ஆண்டி கோலத்தில் இருக்கும்
குழந்தையும் நீயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
தண்டம் ஏந்தி தண்ணருள் செய்யும்
தண்டாயுதனே வேல் முருகா
அன்பரின் துயரை ஆற்றிட வருவாய்
அழகா எங்கள் வேல் முருகா
சிந்தனை முழுதும் உன் வசமாக
செய்திட வருவாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
சுவாமி மலையில் வாழும் எங்கள்
சுந்தர வடிவே வேல் முருகா
பிரணவம் என்பதன் பொருளைச் சொன்னாய்
பெரியவன் நீயே வேல் முருகா
குருவாய் தரிசனம் கொடுக்கும் எங்கள்
குமரா வருவாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
சோதனை யாவும் கலைந்தருள் செய்யும்
சுப்ரமணியனே வேல் முருகா
காத்தலினாலே நான் உனைப் பாடி
கை தொழுவேனே வேல் முருகா
மாதவன் மகுகா மயில் வாகனனே
மலர்பதம் தருவாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பாலினில் குளிக்கும் பாலகம் நீயே
பதமலர் தருவாய் வேல் முருகா
நாளைய பொழுதை நலமுடன் செய்யும்
நாயகன் நீயே வேல் முருகா
சூலம் தாங்கிய உமையவள் மைந்தா
சுந்தர மூர்த்தி வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
தேனில் குளிக்கும் தெய்வம் நீயே
தீவினை அகற்றும் வேல் முருகா
வானவர் வந்து வணங்கிடும் ஆற்றல்
கொண்டவன் நீயே வேல் முருகா
கானக மயிலாள் வள்ளியை மணந்த
கந்தர்வ ரூபா வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
தண்ணொளி சிந்தும் உன்னெழில் முகத்தை
கண்டிட வந்தோம் வேல் முருகா
நன்மைகள் செய்யும் உன் பதம் நாடி
நாங்கள் வருவோம் வேல் முருகா
துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
துணையிருப்பாயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
திருப்பரங்குன்றம் தளமதில் வாழும்
திருவுடையோனே வேல் முருகா
திருமணக் கோலம் கொண்டிருப்பவனே
தினம் உன்னை துதிப்போம் வேல் முருகா
இருபுறம் தேவி எழிலுடன் இருக்க
எங்களைக் காப்பாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
திருச்செந்தூரில் இருப்பவன் நீயே
செந்தில்நாதா வேல் முருகா
நினைத்ததை எல்லாம் முடித்திட அருள்வாய்
நெஞ்சினில் வாழும் வேல் முருகா
அடுத்தவர் தம்மை அழித்திட எண்ணும்
அகந்தையை அழிப்பாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பொறுமையின் உருவே புண்ணிய பாலா
உன்னடி பணிந்தோம் வேல் முருகா
திருவுளம் கனிந்து தீமையை அழித்து
தினம் என்னை காப்பாய் வேல் முருகா
தருமம் மிகுந்த சென்னையில்
கந்தகோட்டத்தில் வாழும் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
செவ்வாய் தோஷம் கண்டவர் உன்னை
நினைத்தால் போதும் வேல் முருகா
பொல்லாத் துயரம் பொடிப்பொடியாகும்
பொங்கிடும் இன்பம் வேல் முருகா
எல்லா பிணியும் தீர்ப்பவன் நீயே
என்னை ஆளும் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
கிருத்திகை சஷ்டி செவ்வாய் நாளில்
விரதம் இருப்போம் வேல் முருகா
உருத்தெரியாமல் வாட்டும் இன்னல்
உன்னால் விலகும் வேல் முருகா
கருத்துடன் உன்னை மனதினில் வைத்தால்
கைமேல் பலன் தரும் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
சிவனுடன் சக்தி கணபதி மூவரும்
உன்னருள் செய்தார் வேல் முருகா
வாங்கிட வருவோர் வாழ்வினில் தோஷம்
விலகிடச் செய்வாய் வேல் முருகா
உனக்கருள் நிகராய் வேறொரு தெய்வம்
உலகினில் உண்டோ வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
சஷ்டி கவசம் சொல்லிடும் அன்பர்
சங்கடம் தீர்ப்பாய் வேல் முருகா
பக்தியில் உன்னை துதிப்பவர்க்கெல்லாம்
பலன் தரும் தேவா வேல் முருகா
வெற்றியைத் தருவாய் வீரம் தருவாய்
விதி வழி போகும் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
செல்வம் அறிவு ஞானம் யாவும்
சேர்க்கும் எங்கள் வேல் முருகா
கள்ளம் இல்லா உள்ளம் தருவாய்
கந்தா கடம்பா வேல் முருகா
நல்வழி நாளும் சென்றிட வேண்டும்
நலமருள்வாயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
குடல் நோய் கண்ட தவமுனி உன்னை
பணிந்தார் அன்று வேல் முருகா
செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று
குணமடைத்தாரே வேல் முருகா
பன்னீர் இலையில் தருவதனாலே
பிணிகள் தீர்த்து வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பேசாதிருந்த குமரகுருபரரை
பேசிட வைத்தாய் வேல் முருகா
கலிவெண்பாவால் உந்தனைப் பாட
கருணை செய்தாயே வேல் முருகா
எளியவர்க்கெல்லாம் ஏற்றம் தரவே
எங்கும் நிறைந்தாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
தீராப்பிணியால் பகழிக் கூத்தர்
துடித்ததை அறிவாய் வேல் முருகா
நேராய் அவர் முன் பிள்ளைத் தமிழை
பாடிடச் சொன்னாய் வேல் முருகா
அவரும் பாடிட அகன்றது பிணியே
அதிசயம் புரிந்தாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பகவத்பாதாள் சங்கரர் ஒருமுறை
காசநோய் கண்டாய் வேல் முருகா
செந்தூர் சென்றால் நலம்பெறலாமென
சிவனார் சொன்னார் வேல் முருகா
சுப்ரமணியனின் புஜங்கம் பாடிட
குணமடைந்தாரே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பிறவித் துன்பம் தீர்ப்பவன் நீயே
பேரருள் செய்வாய் வேல் முருகா
அருவியைப் போலே அருள்மழை சிந்தும்
அழகுடையோனே வேல் முருகா
நெறியுடன் வாழ நீயருள் செய்வாய்
நின் பதம் சரணம் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
கோரிக்கை ஏற்கும் குமரனும் நீயே
கும்பிடுவோமே வேல் முருகா
தோளினில் சுமக்கும் குழந்தையைப் போலே
எளியவன் ஆனாய் வேல் முருகா
வேண்டிடும் அடியார் வேதனை தீர்க்கும்
வேந்தனும் நீயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
முருகு என்றால் அழகு இளமை
நறுமணமன்றோ வேல் முருகா
தேடும் கடவுள் தன்மையும் கூட
முருகன் தானே வேல் முருகா
மாறா இளமை குன்றா அழகும்
கொண்டவன் நீயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
பகைவர் தம்மை அழிப்பதனாலே
கந்தன் ஆனாய் வேல் முருகா
உயிர்கள் மனப்பிணி போக்குவதாலே
குமரன் ஆனாய் வேல் முருகா
நெஞ்சக் குகையில் இருப்பதனாலே
குகனாய் ஆனாய் வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
நாணற் காட்டில் தோன்றியதாலே
தவனன் ஆனாய் வேல் முருகா
ஞான பண்டிதன் என்றுனைப் போற்ற
நல்வரம் தருவாய் வேல் முருகா
முதன்மைப் பொருளாய் இருப்பவன் நீயே
சுப்ரமணியனே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
கலைகளில் சிறக்கும் ஆற்றலைத் தருவாய்
கதிரொளி சிந்தும் வேல் முருகா
ஞானம் வீரம் தந்திடும் உன்னை
நாளும் பணிவோம் வேல் முருகா
பகைமை தன்னை துரத்தும் ஆற்றலை
தருபவன் நீயே வேல் முருகா
பரமன் மகனே பன்னிரு கரனே
பணிந்தோம் உன்னை வேல் முருகா
(saravana bhavane shunmuga vadive) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs. You can also save this post சரவணபவனே சண்முக வடிவே or bookmark it. Share it with your friends…