இந்த ஆன்மீக பதிவில் (கிருஷ்ண கவசம் | ஸ்ரீ கிருஷ்ண கவசம்) – Sri Krishna Kavasam Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கிருஷ்ண கவசம் | ஸ்ரீ கிருஷ்ண கவசம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
============
Sri Krishna Kavacham Lyrics | Sri Krishna Kavacham by Kannadasan
அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் மரபாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே—8
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்அவ் வுலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம்
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே-16
தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளைவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்-24
பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்ச சன்னியம் பக்தனைக் காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க—32
கேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக துணையே தருக
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட—40
திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசைஇல தாக
துருவத் துருவத் துருவத் துருவிட
தொலையப் பொருளே அலையாய் வருக
நிஷ்காமத்தில் நிறைவோன் வருக
கர்மசந் யாசக் களமே வருக
ஞானம் யோகம் நல்குவன் வருக
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக—48
அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம்
மதுசூ தனனே மனிதன் சரணம்
இருடீ கேசா இயலான் சரணம்-56
கீதா சாரிய கிருஷ்ணா சரணம்
வேதா சாரிய வேந்தே சரணம்
தேவகி மைந்தா சிறியேன் சரணம்
யசோத குமாரா அடியேன் சரணம்
உன்னை விட்டொரு உறவுகள் இல்லை
என்னை விட்டொரு இனியவன் இல்லை
நம்மை விட்டொரு நண்பர்க ளில்லை
நன்மையில் உன்போல் நாயக னில்லை—64
எங்கெங் கேநான் இருந்திடும் போதும்
அங்கங் கேநீ அருள் செய வருக
கோசலை ஈன்ற குமரா வருக
கோதையின் மாலை கொண்டவன் வருக
ரகுவம் சத்தின் நாயகன் வருக
யதுவம் சத்தின் யாதவன் வருக
மதுவை வென்ற மாதவன் வருக
மலைக்குடி கொண்ட மாலவன் வருக—72
திருப்பதி யாளும் திருமால் வருக
திருவரங் கத்துப் பெருமாள் வருக
இராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்
“இரா”வணம் எமக்கும் இன்னருள் புரிக
கம்சன் கொடுமை களைந்தோய் வருக
காலனை வெல்லக் கைவலி தருக
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்
காதில் குண்டலம் கையில் வில்லொடு—80
தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக
கௌரவர் தம்மைக் களத்தில் வென்றாய்
கௌரவம் காக்கக் கண்ணா வருக
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி அணைத்தேன்—88
சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்–90
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவ னேநீ தயவுடன் அருள்க!
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையே அன்று?—96
உன்னால் தானே உலக இயக்கம்
கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளு மில்லை
கண்ணனி லாமல் கவிதையு மில்லை
கண்ணனி லாமல் காலமு மில்லை
கண்ணனி லாவிடில் காற்றே இல்லை
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறப்பும் அடியேன் கொண்டால் !—104
சத்திய நாதன் தாள்களை மறவேன்
த்துவக்கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிக ளில்லை நீபேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு
உன்னிடம் சேர்ந்து உன்வடி வாக்கு
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
எங்கு முழங்கு தர்ம்ம் நிலைக்க-112
பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியு மிலாமல்
தொற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்—120
சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு
இப்பணி தொடர அற்புதம் காட்டு
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போ லிருந்து சாதம் ஊட்டு
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு-128
உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசும் ஒருநிலை கூட்டு
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை அசைக்க
பொலிபொலி பொலியெனப் புகழும் விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவெனக் காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க—136
வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி ரகுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம்
அடியவன் வாழ்வில் நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம்—144
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனே துணியென அறிவோம் அறிவோம்
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய–151
!!! சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து !!!
அருமறை முதல்வனை ஆழிமாயனை
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.
============
கிருஷ்ண பகவான் கவசம் நோக்கமும் பயனும்
============
Sri Krishna Kavacham Benefits and significance
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, செல்வம் பெருக, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்தக் கவசத்தை தினமும் பாராயணம் செய்யவும் .
ஸ்ரீ கண்ணபிரான் சர்வலோகரட்சகர். நம்பிக்கையோடு பின்பற்றுவோர்க்கு நல்ல துணைவன். அவன் ஆதார புருஷன், பரமாத்மா, திருவின் நாயகன், இகலோகத்துக்கும், பரலோகத்துக்கும் அவனே நாயகன் .
கடுமையான சோதனைகளுக்குப் பின்னர் மலையளவு புகழையும், பொருளையும் அவன் தருகிறான். யாருடைய ஆசைகளையும் அவன் தடுப்பதில்லை. ஆனால், அவற்றை ஒழுங்கு படுத்துகிறான். கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும். இந்த கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்.
— கவிஞர் கண்ணதாசன்.
============
கவியரசர் கண்ணதாசன் எழுதிய கிருஷ்ண கவசம்
மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரிபூரணவதாரம் என்று போற்றப்படுவது கிருஷ்ணாவதாரம். கேசவன்,கோவிந்தன்,மதுசூதனன்,மாதவன்,வாசுதேவன் என்று பலப் பல நாமங்களை உடைய கண்ணன்/கிருஷ்ணன், தக்ஷிணாயணத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தார்.கண்ணன்.தன்னை நம்பியவர்களுக்குத் தன்னையே தருபவன் கண்ணன்.ஒரு சாரதியாக, நம் மனமென்னும் தேரை நல்வழியில் செலுத்துவதால்,அவனே பார்த்தசாரதியும் ஆவான். இதையே பாரதியும், “கண்ணன் திருவடி எண்ணுக மனமே,திண்ணம் அழியா வண்ணம் தருமே” என்கிறார்.
அந்த மாயக்கண்ணனின் அழகையும்,பெருமையையும் நம் கவியரசர் பல பாடல்களில் பாடிப் பாடிக் களிக்கிறார்.கண்ணனுக்கு தாசன் அல்லவா. அவர் நம் கவலைகள் அகல, கிருஷ்ண கவசம் என்னும் இந்த அருமருந்தினை நமக்கு அருளியுள்ளார். துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, செல்வம் பெருக, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்தக் கவசத்தை தினமும் பாராயணம் செய்வோம்.
(sri krishna kavasam kannadasan tamil lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Kavasam. You can also save this post கிருஷ்ண கவசம் | ஸ்ரீ கிருஷ்ண கவசம் or bookmark it. Share it with your friends…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Adangaatha Asuran Song Lyrics is from the movie Raayan which was released in the year…
Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…
மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…