இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீரங்க நாயகி தாயார் திருவடிகள் சரணம்) – Sri Ranganayaki Thayar Thiruvadi Saranam Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீரங்க நாயகி தாயார் திருவடிகள் சரணம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
கமல வல்லி கனகவல்லி கற்பகவல்லி பாதம் !
அமுதவல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம் !
குமுத வல்லி குருகூர்வல்லி குழைக்காதவல்லி பாதம் !
புஷ்பவல்லி பூர்ணவல்லி பளவவல்லி பாதம் !
அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம் !
செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம் !
ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம் !
குறுங்குடி வல்லி கோளூர்வல்லி குளந்தைவல்லி பாதம் !
வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம் !
வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம் !
மதுரவல்லி மரகதவல்லி வித்துவகோட்டுவல்லி பாதம் !
சுதாவல்லி சுந்தரவல்லி புண்டரீகவல்லி பாதம் !
கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம் !
ரமாமணி வல்லி மோகூர்வல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!
தஞ்தை நாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம் !
சார நாயகி லோகநாயகி புருஷோத்தமநாயகி பாதம் !
பூமிதேவி பூர்வாதேவி சிறுதேவி பாதம் !
மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம் !
செண்பகச்செல்வி பங்கயச்செல்வி பொற்றாமரையாள் பாதம் !
மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம் !
செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் தாமரை நாயகி பாதம் !
தலைச்சங்க, திருப்பேரை நாச்சியார் நரசிங்கவல்லி பாதம் !
கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமாருக்மணி பாதம் !
அல்லிமாமலர் திருமாமகள் பூங்கோவல் நாச்சியார் பாதம் !
மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம் !
கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம் !
பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக்கொழுந்து பாதம் !
பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வநாயகி பாதம் !
பெருந்தேவி கண்ணபுரநாயகி உய்யவந்த நாச்சியார் பாதம் !
லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம் !
செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம்குளிர நினைந்திடுவோம்!
தாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!
(sri ranganayaki thayar thiruvadi saranam lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள். You can also save this post ஸ்ரீரங்க நாயகி தாயார் திருவடிகள் சரணம் or bookmark it. Share it with your friends…