இந்த ஆன்மீக பதிவில் (உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!) – Title : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே! முருகன் பாடல் வரிகள் : படம்: திருவருள் .இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் வரி: கண்ணதாசன். குரல்: TMS. Ulagangal Yaavum Un Arasaangame; Movie | Thiruvarul | Sung By | T.M.Soundararajan | Music | Kunnakudi Vaidhyanathan – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!

(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு

பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!

உந்தன் வரம் வேண்டுமே!

(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்

நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா

அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!

முருகனருள் வேண்டுமே!

(ulagangal yaavum un arasaangame) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல். You can also save this post உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! or bookmark it. Share it with your friends…

Leave a Comment