Kaathodu Kaathanen Song Lyrics In Tamil
Kaathodu Kaathanen Song Lyrics is from the movie Jail which was released in the year 2021 and it was sung by the singers Dhanush, Aditi Rao Hydari. The lyrics of this song Kaathodu Kaathanen Song Lyrics was written by Kabilan and music composed by G.V.Prakash Kumar. G.V. Prakash Kumar, Abarnathy have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : G.V. Prakash Kumar, Abarnathy
திரைப்படம் : Jail
இசையமைப்பாளர் : G.V.Prakash Kumar
பாடலாசிரியர் : Dhanush, Aditi Rao Hydari
எழுத்தாளர் : Kabilan
வருடம் : 2021
=================
பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்:
ஜி வி பிரகாஷ் குமார், அபர்ணதி
இசை:
ஜி வி பிரகாஷ் குமார்
பாடியவர்கள்:
தனுஷ், அதிதி ராவ் ஹைடாரி
ஆன் (தனுஷ்):
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஆன் (தனுஷ்):
காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆன் (தனுஷ்):
காகிதம் போலே உன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்
ஆன் (தனுஷ்):
இழை மறைவில் மறைந்திருந்தாலும்
மழை துளியாய் கலந்திருந்தோம்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
நானனா நானனா
நானனா நானனா
நானனா நானனா
நானனா நானனா
ஆன் (தனுஷ்):
இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே
ஆன் (தனுஷ்):
மழலை போலவே மழையில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
ஆன் (தனுஷ்):
கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆன் (தனுஷ்):
பூவின் மீது கூத்தாடும்
போதை வந்து போலானேன்
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
புல்லின் மீது பூமியை போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்
ஆன் (தனுஷ்):
இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கறைகள் என்பதே இல்லை
பெண் (அதிதி ராவ் ஹைடாரி):
கறைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
ஆன்&பெண்:
வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொருங்கத்தான் இறுக்கி அனைத்தாயே
ஆன் (தனுஷ்):
காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆன்&பெண்:
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்
ஆன்&பெண்:
இழை மறைவில் மறைந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்
Kaathodu Kaathanen Video Song
Kaathodu Kaathanen Song Lyrics from Jail | Kaathodu Kaathanen பாடல் வரிகள் in tamil