Anange Song Lyrics In Tamil
Anange Song Lyrics is from the movie Dev which was released in the year 2018 and it was sung by the singers Hariharan, Barath sunder, Tippu, Krish , Christopher,. The lyrics of this song Anange Song Lyrics was written by Thamarai and music composed by Harris Jayaraj. Karthi, Rakul Preet Singh have performed in this song.
=================
திரைப்பட நட்சத்திரம் : Karthi, Rakul Preet Singh
திரைப்படம் : Dev
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : Hariharan, Barath sunder, Tippu, Krish , Christopher,
எழுத்தாளர் : Thamarai
வருடம் : 2018
=================
அணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இதுதான் தருணம்
தனியே வரணும்
தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும்
பிறகே பெறணும்
உன் கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது
இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் போது
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
பகலெல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த
ரதி நானே
ஓ வெண்ணிலவை அல்லி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின்
சதி தானே
அறை எங்கும் உந்தன் உடைகள்
சுவரெங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கல்
பொல்லாத நினைவுகள்
அணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இதுதான் தருணம்
தனியே வரணும்
தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும்
பிறகே பெறணும்
உன்னை நான்
எதற்கு பார்த்தேன்
விழுங்கும்
விழியை சாடுகின்றேன்
அடடா அழகா
விழிகள் கழுகா
நொடியும் பிரிய மாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது
உத்திரம் உனது
ஹே கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரில்
கயல் கொண்ட மாது
இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் போது
சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு ஏது
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஓஹோ ஏஹே ஆஹா
Anange Video Song