Hasili Fisiliye Song Lyrics In Tamil

Hasili Fisiliye Song Lyrics is from the movie Aadhavan which was released in the year 2009 and it was sung by the singers year : 2009. The lyrics of this song Hasili Fisiliye Song Lyrics was written by Pa. Vijay and music composed by Harris Jayaraj. movie : Aadhavan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Suriya, Nayanthara, Vadivelu, Bharath Murali, B. Saroja Devi, Rahul Dev
திரைப்படம் : Aadhavan
இசையமைப்பாளர் : Harris Jayaraj
பாடலாசிரியர் : year : 2009
எழுத்தாளர் : Pa. Vijay
வருடம் : 2009
=================

அன்பே உன்னால் மனம் ப்பிரீசிங்
அடடா காதல் என்றும் அமீசிங்
எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ சம்திங்

நீ சிரித்தால் ஐ போன் ட்ரிங் ட்ரிங்
வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி

எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஹோ என் கனா என்றுமே நீதானா நீதானா

ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி

எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை

இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை

நீ என்னை தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்

ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி

அன்பே உன்னால் மனம் ப்பிரீசிங்
அடடா காதல் என்றும் அமீசிங்
எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ சம்திங்

நீ சிரித்தால் ஐ போன் ட்ரிங் ட்ரிங்
வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே

யாரிதழில் யாரிதழோ
வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப் பேயா வெக்கை தீயா

ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி

எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஹோ என் கனா என்றுமே நீதானா நீதானா

Hasili Fisiliye Video Song

Hasili Fisiliye Song Lyrics from Aadhavan | Hasili Fisiliye பாடல் வரிகள் in tamil

Leave a Comment