Kanavanukkaaga Song Lyrics song is from the movie Thodarum which was released in the year 1999 and it was sung by the singers year : 1999. The lyrics of this song Kanavanukkaaga Song Lyrics was written by Pulamaipithan and music composed by Ilaiyaraaja. movie : Thodarum have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thodarum
திரைப்படம் : Thodarum
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1999
எழுத்தாளர் : Pulamaipithan
வருடம் : 1999
=================

கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி
பூமி இதைப் பெண் என்று
போற்றும் உலகம் ஹோ
பூமியினும் மேலம்மா
பெண்ணின் இதயம்
அன்பை வளர்ப்பாள்
தியாக நெருப்பில் தன்னை எரிப்பாள்

கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி

தெய்வ வீணை இதை
இங்கு வீதியினில்
போட்டது விதிதானா
தேடி வந்த துணை வேறு மாலை இட
செய்தது விதி தானா

என்ன ஜென்மமடி
பெண்ணின் ஜென்மம் இது
சொல்லடி சிவசக்தி
எந்த நாளிலடி
இந்த வேதனைகள்
தீர்வது சிவசக்தி

தொடக்கம் எது முடிவும் எதுவோ
எதுவும் இங்கு தெரியாது
நடப்பதென்ன கதையா கனவா
அதுவும் இங்கு புரியாது
மாவிலைத் தோரணம் ஆடுது
அங்கொரு வாசலிலே
மங்கையினால் உயிர் ஆடுது
இங்கொரு ஊசலிலே

கணவனுக்காக
எதையும் செய்வாள் பத்தினி
உயிரையும் கூட தருவாள்
அந்த உத்தமி

நாயன ஓசையில் அங்கே ஓர்
வாழ்த்தொலி கேக்குதம்மா
பேதையின் பாதையில் இங்கே ஓர்
கானம் நெருங்குதம்மா

அக்கினி சாட்சியில் ஓர் வாழ்க்கை
ஆரம்பம் ஆகுதம்மா
அந்திமத் தீயினில் ஓர் வாழ்க்கை
பயணம் ஓய்ந்திடுமா

கணவனது வாழ்வுக்காக
நொந்து நொந்து நூலானாள்
தன் தலையில் தீயைத் தாங்கும்
மெழுகுவர்த்தி போல் ஆனாள்
வாழ்க்கையின் கணக்கினில்
ஆண்டுகள் மாதங்கள் ஆகுதம்மா

மாதமும் தேய்ந்தொரு
நாள் என நொடி எனப் போகுதம்மா
விதி இதுவா அவன் எழுதும்
கணக்கிதுவா

Leave a Comment