Karumbaale Villa Katti Song Lyrics In Tamil

Karumbaale Villa Katti Song Lyrics song is from the movie Vaazhga Valarga which was released in the year 1987 and it was sung by the singers year : 1987. The lyrics of this song Karumbaale Villa Katti Song Lyrics was written by Ilaiyaraaja and music composed by Ilaiyaraaja. movie : Vaazhga Valarga have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : movie : Vaazhga Valarga
திரைப்படம் : Vaazhga Valarga
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1987
எழுத்தாளர் : Ilaiyaraaja
வருடம் : 1987
=================

ஆஹா கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

ஆஹா தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே ஹே

தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே

ஆஹா வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி
ஆமா
எந்த ஊருலேயும் அவ கட்சிதான் மெஜாரிட்டி
ஆமா ஆமா

ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி
ஆமா
எந்த ஊருலேயும் அவ கட்சிதான் மெஜாரிட்டி
ஆமா ஆமா

மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி
ஆமா
எந்த ஊருலேயும் அவன் கட்சிதான் மெஜாரிட்டி
ஆமா ஆமா

மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி
ஆமா
எந்த ஊருலேயும் அவன் கட்சிதான் மெஜாரிட்டி
ஆமா ஆமா

கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

முப்பத்து முக்கோடி தேவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க
சிவ பெருமானின் தவத்தைக் கலைக்க
மன்மதனும் ஒப்புக் கொண்டு
வில்லைப் பூட்டி பாணங்களை ஏற்றி
மலர்ப் பாணங்களை
சிவ பெருமான் மீது தொடுத்தான்

தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்

பாதி உமையவளின் மீது
கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்
பாதி உமையவளின் மீது கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

சிறிது மனம் கலங்கி
தவறை உணர்ந்து
சிவன் வருந்தி வருந்தி இருந்தான்
மனம் வருந்தி வருந்தி இருந்தான்

பொறிகள் பறக்க கண்ணு கனல்கள் தெறிக்க
சிவன் மதனை எரிக்கக் கொண்டான்
அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தான்

தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

இணைந்திருந்த இளையவனும்
எரிந்த பெரும் கொடுமை கண்டு
வருந்தும் அந்த நிலை மோதவே
கலந்திருந்த காதல் மகன்
மறைந்த அந்த துயரம் தன்னை
மறந்து ஒரு பழி வாங்கவே

யாரும் எதும் கேட்க முடியாத அந்த சிவனை
நீதி அது கேட்கத் துணிந்தாள்
உற்றவனின் குற்றம் அதை உணர்ச்சி கொள்ள
நீதி பெற்று வர ரதி கிளம்பினாள்
கொற்றவனின் நிலை உணர்த்தடி
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்

Karumbaale Villa Katti Video Song

Karumbaale Villa Katti Song Lyrics from Vaazhga Valarga | Karumbaale Villa Katti பாடல் வரிகள் in tamil

Leave a Comment