=================
திரைப்பட நட்சத்திரம் : soori and vijay sethupathi
திரைப்படம் : Viduthalai part 1
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : தனுஷ் மற்றும் அனன்யாபட்
எழுத்தாளர் : சுகா
வருடம் : 2023
==================
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண் : நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண் : காத்தில் வரும் புழுதியப்போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கிவிட நெனைக்காது
ஆண் : முன்னேறிப்போக
முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்துணைக்கு நாந்தான்
எந்துணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே
ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ
பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேத்து வச்ச கனவுகள
நிறைவேத்தி விட யாருமில்லையே
ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும்
எப்போதும் மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்
இல்லாமல் போகாது
ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு
நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும்
சந்தோஷம் பொங்கி வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமேly
Onnoda Nadandhaa Video Song
பீர் பாடல் வரிகள் Beer Song Lyrics is from the movie Diesel which was released in…
Beer Song Lyrics In English Beer Song Lyrics is from the movie Diesel which was…
இந்த ஆன்மீக பதிவில் (சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்) - Soundarya Lahari Lyrics in Tamil பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல்…
இந்த ஆன்மீக பதிவில் (ஆதித்ய ஹ்ருதயம் - 11-15) - ஆதித்ய ஹ்ருதயம் -11-15 பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…
இந்த ஆன்மீக பதிவில் (ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா) - Onnam Thiruppadi - Padi Poojai Paattu…
இந்த ஆன்மீக பதிவில் (கொட்டி முழக்கிடுவோம் பம்பை கொட்டிமுழக்கிடுவோம்) - Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது... இந்த பாடல் வரிகளை…