Nanbanai Partha Song Lyrics is from the movie Ninaithale Inikkum which was released in the year 2009 and it was sung by the singers year : 2009. The lyrics of this song Nanbanai Partha Song Lyrics was written by Annamalai and music composed by Vijay Antony. Prithviraj, Shakkthi Vasudevan, Priya Mani, Anuja Iyer have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : Prithviraj, Shakkthi Vasudevan, Priya Mani, Anuja Iyer
திரைப்படம் : Ninaithale Inikkum
இசையமைப்பாளர் : Vijay Antony
பாடலாசிரியர் : year : 2009
எழுத்தாளர் : Annamalai
வருடம் : 2009
=================

நண்பனை பார்த்த தேதி மட்டும்

ஒட்டி கொண்டது என் நியாபகத்தில்

என் உயிர் வாழும் காலம் எல்லாம்

அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று

என்னை கேட்டால் ஓ ஒஹொஹோஒ

என் கல்லூரி வாழ்கையை காட்டுவேன்

என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

ஓ ஒஹொஹோஒ

ந நானா ந

நானா நானா நானா

நண்பனை பார்த்த தேதி மட்டும்

ஒட்டி கொண்டது என் நியாபகத்தில்

என் உயிர் வாழும் காலம் எல்லாம்

அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

சிறகு இல்லை வானம் இல்லை

வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்

இளமை இது ஒரு முறைதான்

துளி மிச்சம் இல்லாமல் ருசிப்போம்

கவலையில்லை கபடமில்லை

நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்

எரிமலையோ பெரும் அலையோ

எங்க நெஞ்சை நிமித்தி தான் நடப்போம்

வரும் காலம் நமதாகும்

வரலாறு படைப்போம்

உறங்காமல் அதற்காக

உழைப்போம்

ஓ ஒஹொஹோஒ

ந நானா ந

நானா நானா நானா

நண்பனை பார்த்த தேதி மட்டும்

ஒட்டி கொண்டது என் நியாபகத்தில்

என் உயிர் வாழும் காலம் எல்லாம்

அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

வித வித மாய் கனவுகளை

தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்

பயம் அறியா பருவம் இது

நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் என்று  ஏதுமில்லை

இங்கு ஜாதி மதங்களை மறப்போம்

பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்

உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்

மழை தூங்கும் வெயில் நேரம்

அதை போலே மனது

மனம் போலே தடுமாறும் வயது

ஓ ஒஹொஹோஒ

ந நானா ந

நானா நானா நானா

நண்பனை பார்த்த தேதி மட்டும்

ஒட்டி கொண்டது என் நியாபகத்தில்

என் உயிர் வாழும் காலம் எல்லாம்

அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று

என்னை கேட்டால் ஓ ஒஹொஹோஒ

என் கல்லூரி வாழ்கையை காட்டுவேன்

என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

ஓ ஒஹொஹோஒ

ந நானா ந

நானா நானா நானா

Leave a Comment